
24 – 07 – 2001 நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் 25 ம் தேதி மதியம் வரையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஓராண்டிற்கும் மேலாக உளவுத்தகவல்கள் திரட்டி சிங்கள தேசத்தின் தலையில் ஓங்கி அடித்த அடியில் சிங்களன் புலிகளிடம் மண்டியிட்டான்.
உலகில் எவரும் செய்யத்துணியாத பணியாகும் எதிரியின் கோட்டைக்குள் புகுந்து மாதக்கணக்கில் மறைவிடத்தில் உயிரைப் பணயம் வைத்து உளவுப் பணியினை செய்ய வேண்டும்.
“ஆப்ரேஷன் எல்லாளன்” நடவடிக்கைக்காக உளவுத்தகவல் திரட்டிட வன்னியில் நன்கு பயிற்சி பெற்ற போராளிகள் அனுப்பப்பட்டனர்.
பல கட்டங்களாக அனுப்பி உளவுப் பணிகளை செய்து தகவல்களை சேகரித்தனர் உளவு சேகரிக்க சென்ற எமது போராளிகள் விமானப்படை தளத்தை ஒட்டியுள்ள புதர் மண்டி கிடக்கும் காடுகளிலும் விமான நிலையத்தை ஒட்டி இருக்கக்கூடிய கழிவுநீர் கால்வாயிலும் நாள் கணக்கில் தங்கியிருந்து உளவுப் பணிகளை திரட்டினர்.
இப்போராளிகள் தமிழ் சிங்களம் நன்கு கற்றறிந்தவர்கள் ஆவர்
கண்ணால் கண்டதை புகைப்படங்கள் எடுத்ததை குறிப்புகள் எடுத்ததை வன்னியில் மாதிரி விமானத் தளத்தை உருவாக்கி தீவிரப் பயிற்சியை எடுத்து.
எமது மக்களை நித்தம் நித்தம் கொன்று குவிக்கும் சிங்கள வான் கழுகுகளை வேட்டையாட அவனின் கோட்டைக்குள் சந்திக்க வன்னியிலிருந்து ( 300 கிலோமீட்டர் ) புறப்பட்டனர் புலிகள்.
கட்டுநாயக்கா விமானப்படைத் தளம்
24 – 07 – 2001 நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் 25 ம் தேதி மதியம் வரையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்த அனைத்து விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன மொத்த எண்ணிக்கை 28 ஆகும் இதில் இரண்டு கிபிர் குண்டு வீச்சு விமானம் 1 மிக் ரகம் 2 ஹெலிகாப்டர் 2 பயிற்சி விமானம் மற்றும் ராணுவ போக்குவரத்து விமானம் கடற் கண்காணிப்பு விமானங்கள் பயணிகள் விமானம் உள்ளிட்ட 28 விமானங்கள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்தனர்.
எம்மக்களை குறி தவறாது குண்டு வீசிக் கொன்ற சிங்கள விமானப்படை வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர் 22 பேர் காயமுற்றனர் விமானப்படை கண்காணிப்பு மையம் அழிக்கப்பட்டது.
இவ்வரலாற்று சாதனையை புரிந்து வீர காவியமான 14 கரும்புலிகளையும் தமிழினம் உள்ளவரையில் மறவோம் உங்கள் வரலாற்று சாதனையை உலக ராணுவம் பயிலும்.
சிங்களன் புலிகளோடு சமாதானமாக இத்தாக்குதல் தான் முக்கிய காரணம் கிட்டத்தட்ட 5000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனை கருவாக வைத்து தான் எல்லாளன் திரைக்காவியம் எடுக்கப்பட்டது ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய திரைக்காவியம்
இத்திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் ஒரு சிறுவன் வீதியில் தன் மாமாவோடு நடந்து செல்லும் போது கிபீர் போர் விமானம் வானில் பறந்து செல்லும் மக்கள் அனைவரும் அச்சமுற்று ஓடிப் போய் ஒளிந்து கொள்வர் பதுங்கு குழியல் அத்த தருணத்தில் அச்சிறுவன் தன் மாமாவிடம் கேட்பான் இந்த கிபீரை அடித்து வீழ்த்த இயலாதா என்று சிறுவனுக்கு தெரியாது அந்த கிபீரை அடித்து வீழ்த்தப் போவது அந்த கரும்புலி மாமா தான் என்று.
இந்நாள் தமிழர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் சிங்கள பேரினவாத கர்வம் கொண்ட தலையில் ஓங்கி சம்மட்டியால் அடித்து வீரகாவியமான 14 கரும்புலிகளுக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தாக்குதலை நெறிப்படுத்திய போரியல் நிபுணர்கள் “பொட்டுவும்” “தேசியத் தலைவரும்”
நன்றி