
தமிழீழ மக்களின் நிர்வாக விடயங்களுக்காக விடுதலைப் புலிகளின் முக்கிய பிரிவாக அரசியற்த்துறை செயற்பட்டது
தமிழீழ மக்களின் நிர்வாக விடயங்களுக்காக விடுதலைப் புலிகளின் முக்கிய பிரிவாக அரசியற்த்துறை செயற்பட்டது. சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் நவம்பர் 02.10.2007 வரை விடுதலைப் புலிகளினின் அரசியற்துறைப் பொறுப்பாளராக செயற்பட்டார். இவர் வீரச்சாவடைந்த பின் அரசியற்துறைப் பொறுப்பாளராக ப.நடேசன் அவர்கள் பொறுப்பை ஏற்று, இறுதிவரை 18 மே 2009 பொறுப்பாளராக செயற்பட்டார். அரசியல்த்துறையின் கீழ் பல பிரிவுகளாக செயற்பட்டன. இது விடுதலைப்போராட்டம் மெளனவிக்கும் வரை கிட்டத்தட்ட ஒரு தனிநாடாகச் செயலாற்றியது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது, விடுதலைப்புலிகளின் ஆலோசக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தலைமைப் பேச்சாளருமாக செயற்பட்டார். ஆயினும் முக்கிய தீர்மானங்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனினாலும் எடுக்கப்பட்டன.
![]()
Building_the_state_Tamileelam_von Stokke