×

மாத்தளன் படுகொலை – 18 செப்ரெம்பர் 1993

மாத்தளன் படுகொலை – 18 செப்ரெம்பர் 1993

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்பரப்பினை ஒரு பக்க எல்லையாகக் கொண்டமைந்த கிராமங்களில் மாத்தளன் கிராமமும் ஒன்று.
இக்கிராம மக்கள் தேவைகளைப் கடற்றொழிலையே அத்தோடு தமது மையங்களாக இந்தக் கடற்கரைகளையே பயன்படுத்தி வரலாயினர். இவர்கள் தமது நாளாந்தத் தேவைகளை ஈடுசெய்யவேண்டுமாயின் நான்கு கி.மீ.இற்கு அப்பாலுள்ள புதுக்குடியிருப்புச் சந்திப்பகுதிக்கே செல்லவேண்டிய நிலையும் இருந்தது. தமது கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன்களைக்கூட இவர்கள் நீண்டதூரம் சென்றே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையில் வாழ்ந்து வந்தார்கள்.

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்து கடற்படையினர் கடலில் மீன்பிடிப்பதற்குத் தடைவிதித்ததுடன், மீனவர்களைக் கடலிற் தாக்கியும் வந்தார்கள் .ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்தும் கடற்றொழிலைப் பல சிரமங்களுக்கு மத்தியிலும் செய்து வந்தனர். தமது அன்றாடத் பூர்த்திசெய்யக் நம்பியிருந்தனர்.

பொழுதுபோக்கு 18.09.1993 அன்று மாலை 3:45 மணியளவில் மாத்தளன் சந்தியில் கட்டப்பட்ட பொது மண்டபத்தின் திறப்புவிழாவிற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து அப்பகுதியில் வசித்த மக்களும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் அங்கு கூடினர். நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மாலை நான்கு மணியளவில் விமானப்படையின் உலங்குவானூர்தி அப்பகுதியால் சென்றது. நேரம் மாலை 5:30 மணிக்கு மாத்தளன் வான்பரப்பிற்குள் பிரவேசித்த சிறீலங்காவின் விமானப்படையின் ‘புக்காரா’ குண்டுவீச்சு விமானங்கள் பத்திற்கும் அதிகமான றொக்கட் குண்டுகளை மண்டபத்தினை நோக்கி வீசியதில் மூன்று குண்டுகள் மண்டபத்தின் மீதுவிழுந்தன. ஏனைய குண்டுகள் மண்டபத்தின் முன்புள்ள சிறிய வயற்பகுதிகளில் விழுந்து வெடித்தன. எங்கும்’ ஐயோ’என்ற அவலக்குரலுடன் மக்கள் திக்குத்திசையறியாது சிதறியோடினர்.

மண்டபம் புகை மண்டலமாக மாறியது. இவ்விமானத் தாக்குதலில் இருபது பொதுமக்கள் அவ்விடத்தில் உடல் சிதறிப் பலியானார்கள். நாற்பதிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். குறிப்பிட்ட பொதுமண்டபமும் முற்றாகச் சேதத்திற்குள்ளானது. தாக்குதல் நடந்த சிலமணி நேரத்தின் பின் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மூலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. இன்ரிகிறேஸ் ஜோசப் – 31
02. இம்மானுவேல் ஆனந்தராஜா 19
03. பிரான்சிஸ் அருள்தாஸ் கடற்றொழில் 23
04. பிலிப்புதவராசா சுஜாத்தா மாணவர் 10
05. பரமானந்தம் 40
06. தம்பிராசா குணசிங்கம் விவசாயம் 18
07. தியாகராஜா கண்ணன் மாணவன் 16
08. மரியதாஸ் அன்ரன் ஜெயபாலன் கடற்றொழில் 32
09. மரியதாஸ் அன்ரன்யேசுதாஸ் 30
10. முத்தையா துரைசிங்கம் – 45
11. மரியதாஸஇ; ன்மானுவேல் ஆனந்தராசா விவசாயம் 19
12. டானியல்பிளi; ள பிலிப்புதவராசா கடற்றொழில் 39
13. அந்தோனிப்பிள்ளை சகாயநாயகி வீட்டுப்பணி 18
14. யோசப் வினிற்றா கிறேஸ்பிரெட்றிக் வீட்டுப்பணி 31
15. யேசுமார்க் அன்ரனிதாஸ் கடற்றொழில் 29
16. செல்லையா செல்வம் (கண்ணன்) மாணவர் 16
17. சியாத்தா திலீப்மேரி மாணவன் 9
18. சின்னப்பு அல்போண்ஸ் விவசாயம் 22
19. சங்கரசிவம் புலேந்திரன் மாணவன் 15
20. சங்கரசிவம் சுரேந்திரன் மாணவன் 18

இச்சம்பவத்தில் காயப்பட்டோர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில்)
01. கந்தையா குமாரசாமி விவசாயம் 45
02. அன்னலிங்கம் சொர்ணலிங்கம் கடற்றொழில் 37

 

 

Eelam Tamil Genocide

Genocide

Massacres

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments