
ஓயாத அலைகள் 2இல் வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீர வணக்க நினைவுநாள் இன்றாகும்.
இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம் நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ. எங்களைப் பார்க்க வேண்டாம் எனக் கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தவர்கள்.
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நிசாந்தன் அவர்களி்ன் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.
26.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் இலுப்பைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் சுரேஸ் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.