
லெப். கேணல் யோகா, லெப். கேணல் தயாசீலன் வீரவணக்க நாள்.!
லெப். கேணல் யோகா, லெப். கேணல் தயாசீலன் ஆகிய மாவீரர்களின்
வீரவணக்க நாள் இன்றாகும். 20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் துணையுடன் தேசவிரோதிகள் (கருணா குழு) மேற்கொண்ட “கிளைமோர்” தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்’ லெப். கேணல் பவா / தயாசீலன், ‘மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளர்’ லெப். கேணல் யோகா ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம்.
தமிழீழ விடுதலை போரில் இதே நாளில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கங்கள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”