×

தாய் என்ற சொல்லிற்கே தாயாக……

தாய் என்ற சொல்லிற்கே தாயாக……

தாயுமான எம் தலைவனை
ஈன்று புறம் தந்தவளாக..

புலி குடியிருந்த குகைதனைக் கருவறையாகக் கொண்டதனால் தாங்கொணாச் சித்திரவதைகளைச்
சிங்கள இனவெறியரால்
இறுதிநாட்கள்வரை சந்தித்தவளாக..

தனிமைச் சிறையின்
கொடும் துனபங்களாலும்
இனவலி சுமந்தவளாக..

வரலாறு தொழுதெழும்
எங்கள் பார்வதி அம்மாவின்
இனிய அகவை நாளில்..

தமிழுள்ள காலமெல்லாம்
தமிழுலகம் போற்றும் தாய் உன்னை
வணங்குகின்றோம் தாயே!

மாதவம் நோற்றுப் பிறந்த எம் தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த தேசியத் தாய்

பார்வதியம்மாள் அவர்கள் பிறந்திட்ட இத் திருநாளில் அன்னையைப் போற்றி வணங்குகிறோம்

07.08.2025

புகழ்வணக்கம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments