
இந்த நெடுங்கல் படம் முகநூலில் வந்த போது இது ஆதிதமிழ் எழுத்துக் கல் என்று புரிந்தது.
இந்த நெடுங்கல் படம் முகநூலில் வந்த போது இது ஆதிதமிழ் எழுத்துக் கல் என்று புரிந்தது. ஆனால் கீழே ஒருவர் நின்று கொண்டு அதை தொட்டு காட்டுவது போல இருந்ததால் எழுத்துகள் மறைந்து தெளிவாக படிக்க முடியவில்லை. ஆளற்ற படம் வரட்டும் என்று இதுநாள் வரை காத்திருந்தேன். கடந்த வாரம் இன்னொருவர் இந்த நெடுங் கல் படத்தை இட்டிருந்தார். அதில் எழுத்துகள் தெளிவாக தெரிந்ததன. ஆள் யாரும் இல்லை. இது எங்குள்ளது, எக்காலத்தது என்று தெரியவில்லை. ஆனால் ஐரோப்பாவில் தான் இருக்க வேண்டும் என்று உணர முடிகிறது. அதில் இன்னொரு மொழியில் நேர்த்தியாக சில எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதை வைத்து தான் ஐரோப்பா என்று உறுதி செய்ய முடிந்தது.
இதில் ஒரு உருவத்திற்கு இடம், வலம் என்று ஆறு கைகள் உள்ளன. நடு கைகள் W போல விரிந்து எதையோ வட்டமாக வைத்துள்ளன. கீழ் கைகள் கீழ்நோக்க நீண்டு வட்டமாக எதையோ பற்றியுள்ளன. மேல் கைகள் குடத்தை தலையில் சுமப்பது போல சக்கரத்தை பிடித்துள்ளன. முகத்தில் வெள்ளாடு பொறிக்கப்பட்டுள்ளது. மாரத்தே முலைகள் உள்ளன. அதன் கீழ் நான்கு மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. மீன்களின் வால் நுனி அவை மீன் என்பதை அடையாளப்படுத்துகின்றன. கீழே வட்டத்துள் வட்டமாக மூன்று வட்டங்கள் உள்ளன. இவை எழுத்திற்காக வேண்டி இப்படி செயற்கையாக வரைந்து செதுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு. இப்படி ஒரு உயிரி பூவுலகில் வேறு எங்கும் அறியப்படவில்லை. எனவே இந்த ஆதி தமிழ் எழுத்தை பிரித்து எழுத்தறிந்து படிப்போம்.

விரிந்த கைகள் >𒉼< – வீ, ஆட்டை குறிக்கும் சொல் வற்கு, வற்காலி ஆகியன. எனவே றகரத்தை குறிக்க வெள்ளாட்டின் தலை தேரப்பட்டது இங்கு. வெள்ளாடு – ற, வட்டம் ⓧ – ன, வட்டம் ⓧ – ன், _ – ந, () – ன், ) – ன, பானைக் கை – பா, பெரு வட்டம் – ண, சிறு வட்டம் – ன், ✓ – ந, ⓧ – ன், \ – ன, ⓧ – ன், முலை என்ற சொல்லில் இருந்து – ம, வல மீன் – ச், இட மீன் – ச, உள் வட்டம் – ந, நடு வட்டம் – ன், பெரு வட்டம் – ன, மேல் வல மீன் – ச், மேல் இட மீன் – ச, தொப்புள் () – ன் . இதில் உள்ள சொற்கள் விறனன் நன்ன பாணன் நன்னன் மச்ச நன்னச்சன் என்பன.
விறனன் – ஆடும் விறலி; நன்னு (நன்ன) – பெண்; பாணன் – பாடகன்; நன்னன் – பெருமைக்குரியவன், மதிப்பிற் குரியவன், honourable; மச்ச – மீன்; அச்சன் – சிறந்த, தேர்ந்த, வல்ல, gratitude. இதன் பொருள் ஆடற் பெண்ணையும் பாணனையும் பெருமைக்குரிய மேலோன் மீன் (தந்து) பெருமைப்பட சிறப்பித்தான் என்பது செய்தி. விறலி, பாணனை சிறப்பித்து மன்னன் மீன் வழங்கினான்.
இந்த படத்தில் உள்ள பொருள் மத்திய உருவம் மற்றும் பல்வேறு சின்னங்கள் அல்லது அதைச் சுற்றி எழுதுவது போல் செதுக்கப்பட்ட கல் தகவலாகத் தெரிகிறது.
தகவல் இல்லாததால், ஸ்லாப்பின் தோற்றம், நோக்கம் அல்லது சரியான அர்த்தத்தை அடையாளம் காண முடியாது. மத்திய உருவம் பல கால்கள் அல்லது டென்டக்கிள் உள்ளன, மேலும் முக்கிய வட்ட சின்னங்கள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட எழுத்துக்கள் தெரியாதவை மற்றும் உறுதியாக மொழிபெயர்க்கவோ அல்லது அடையாளம் காணவோ முடியாது. இது ஒரு பண்டைய கலை அல்லது ஒரு கலை அல்லது அடையாள நோக்கத்துடன் கூடிய நவீன பொழுதுபோக்காக இருக்கலாம்.