×

புத்துக்குடியிருப்பு உள்ள பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை

சிறீலங்கா விமானப்படையினர் (எஸ.எல்.ஏ.எப்) வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பிலுள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது குண்டுவீச்சுத்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மருத்துவமனை முற்றாகச் சேதமடைந்ததோடு, 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதேவேளை சிறீலங்கா தரைப்படையினர் மருத்துவமனை மீது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இதனால் உயிர்பிழைத்திருந்த நோயாளர்களைக் கூட மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது.

பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே உள்ளவை தமது இலக்குகள் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கூறியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள மருத்துவ வசதிகள் எவற்றையும் தாக்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கிலாரி கிளிண்டன் மற்றும் பிரிட்டிஸ் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் சிறீலங்கா அரசிற்கு வலியுறுத்திக் கூறியதைத் தொடர்ந்தும் இக் குண்டுவீச்சுத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையானது நவீன வசதிகளைக் கொண்ட அரச சார்பற்ற நிறுவகமாகும். போர்க்காலங்களில் தனது அளப்பரிய பணியினை மக்களுக்கு வழங்கிய மருத்துவர் திரு. பொன்னம்பலம் அவர்களின் நினைவாக 1996 ஆம் ஆண்டு இவ் மருத்துவமனை ஆரம்;பிக்கப்பட்டது.
போர்நிறுத்த காலத்தில் பல வெளிநாட்டு நிபுணர்கள், புலம்பெயர் மருத்துவர்கள் போன்றோர் இம் மருத்துவமனையின் நவீன வசதியை மேம்படுத்துவதில் பெரும்பங்காற்றினர்.
மருத்துவப்பணியின் நிலையான நிறுவகங்கள் மற்றும் நடமாடும் மருத்துவப்பிரிவுகள் எந்தவொரு சூழ்நிலையிலும், எந்நேரமும் போரிடும் தரப்பினரால் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென முதல் ஜெனிவா மாநாடு கூறுகிறது.

காயமடைந்தோர், நோயுற்றோர், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் பொது மருத்துவமனைகள் எந்தவொரு சூழ்நிலையிலும் தாக்குதலுக்கு உள்ளாக்கக் கூடாது. எனினும் எல்லா நேரங்களிலும் போரிடும் தரப்பினரால் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென நான்காவது ஜெனிவா மாநாட்டின் 18 வது பிரிவு கூறுகிறது.

ஜெனிவாவின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் 1949 ஆம் ஆண்டின் நான்காவது உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக சிறீலங்கா (இலங்கை) 23.02.1959 ஒப்புதல் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments