
எம்ஜிஆர் அவர்கள் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி, போராளிகளை காப்பாற்றுகிறார்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாயகனாக விளங்கும் பிரபாகரனும் முகுந்தனும் சென்னை பாண்டிபஜாரில் மோதிக்கொள்கிறார்கள். இம்மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது.
அதனால் அன்றைய தமிழர் நலன் சார்ந்த 20 க்கும் மேற்பட்ட கட்சிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் உட்பட கைதான போராளிகள் யாரையும் சிங்கள அரசிடம் ஒப்படைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
அதையே காரணம் காட்டி எம்ஜிஆர் அவர்கள் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி, போராளிகளை காப்பாற்றுகிறார். ஒரு வேலை குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை போல சிங்கள அரசிடம் ஒப்படைக்கபட்டிருந்தால் ஒரு வீரனின் வீர வரலாறு சிங்கள சிறையில் முடிந்து இருக்கும்.
பிரபாகரனுக்கும் தமிழீழ விடுதலை போரை முன்னெடுத்து செல்வதற்கும் எம்ஜிஆர் புரிந்த அளப்பரிய உதவிகள் சொல்லி மாளாது. சரி குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் ஆகிய போராளிகளை தமிழகத்தில் பிடித்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தது யார் தெரியுமா?