
புயல்கள்….
இது எங்கே? எப்போது? எப்படியென்றில்லாமல்
பொங்கும் கடலிலும் அங்கு தலையெடுக்கும்
அரக்கரை அழித்திடவே புதிதாய் எழுந்திடும்
நேர கால கணக்கின்றி
வீரம் விளைகின்ற தலைவன் இதயத்தின்
கருவாக உருவாகும்
புயலிங்கே கருவேங்கை மனதேறி உரமாகும்
அது பகை போக்க விரைவாகும்
கடலில் தோன்றி தரையில் தோன்றி
தரையில் மாறி காலங்களை அழிக்கும் புயல்ல இது!
வரிவேங்கைத் தலைவன் வளர்க்கின்ற புயல்கள்
விரிகின்ற விடுதலை நெருப்பேந்தி
உருகின்ற புலிவீரர் மனப் புயல்
புயலின் மையம் எம் தலைவன்
இதயம் தான் பூக்கின்ற விடுதலைக்காய்
இப்புயல்கள் தினம் வீசும்
காற்றின் வாசமாய் எந்நாளும் இப்புயல்கள் வீசும்
வீசுகின்ற புயலால் விடியும் எம் தேசம்!
வாசம் வீசுகின்ற மண்ணாய் பொலியும் எம் ஈழம்……
– செ. புரட்சிகா
மாலதி படையணி
– சூரியப்புதல்வர்கள்