
இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன்
இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன்
இதயம் தேடித் துளைத்த குண்டு இவனுக்காகவும் அழுங்களேன்
நடு நெஞ்சில் குண்டு தாங்கிக் கிடந்தது நம் பிள்ளை
நாதியற்ற ஓரினத்தை தூக்கி வைத்த தலைமகனின் கடைசிக் கிள்ளை
தாய்ப்புலி ஈன்றெடுத்த
தடை உடைக்கும் புலிப் போத்து
எதிர் நின்ற சிங்கத்தை பிடரி பிடித்திழுத்து இருவென இருத்தி
எழுவென எழுப்பி வைத்து ஈழம் காத்து நின்ற இரும்பொறையின் இறுதி முத்து.
வெற்றிகள் பல கண்டு மிடுக்கினை
கொண்ட நிலம் வீரத்தை குடியிருத்தி
பகை போக்கும் ஈழத்தின்
மாசற்ற தலைவனவன் மடியேறி திரிந்த நாற்று
காலத்தின் கோலமென்று நாமெல்லாம் நினைத்திருக்க
கண் தோண்டிக் குருடாகித் திரிகின்ற உலகம் அழித்தொழித்த ஈழத்தின் இளவரசன்
ஐயோ….
இவனுக்காகவும் அழுங்களேன்
கவிப்புயல் சரண்
( பாலச்சந்திரனுக்காக எழுதப்பட்டது)