×

-காத்தான்குடி முஸ்லிம்கள் படுகொலையானது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட சதி-

காத்தான்குடி முஸ்லிம்கள் படுகொலையானது சிறிலங்கா அரசின் திட்டமிட்ட சதி-

தமிழீழ விடுதலைப்புலிகள் 1990.08.05 இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாக ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டது என்னவெனில்….

அண்மையில் முஸ்லிம் நாடுகளுக்கு ஆயுதம் வாங்க சிறிலங்கா அரசு தனது பாதுகாப்பு அமைச்சரை அனுப்பியது. அதேவேளை தமிழீழத்திலும் இலங்கைத்தீவின் தென்பகுதியிலும் அரசின் மனித உரிமைமீறல்கள் தொடர்கின்றன.

இதனால் பல நாடுகள் சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்க மறுத்து வருகின்றன என விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியால் நேற்று விடுத்த அறிக்கையில் கூறப்படுகிறது. மேலும் அவ்வறிக்கையில் அரபு நாடுகளிடம் நிதியும் ஆயுதமும் பெற சிங்கள அரசு பல நாடகங்களை ஆடுகின்றது. முதலில் இலங்கையிலிருந்து இஸ்ரேலிய நலன்புரி அமைப்பை மூடியது. இப்போது முஸ்லிம் மக்களைக் கொலை செய்து விட்டு பழியைத் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சுமத்துகின்றது.

விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்களை கொல்கின்றார்கள் அவர்களை எதிர்த்துப்போராடவேண்டும் என அரபு நாடுகளில் ஆயுதங்களைப்பெறலாம் என சிங்கள அரசு திட்டமிட்டு செயல்படுத்துகின்றது.

சிங்கள அரசின் இத்திட்டத்திற்கு முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என தம்மைக் கூறிக்கொண்டு பதவிக்காக அற்ப சலுகைக்காகவும் சிங்கள அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிலர் துணை போகின்றனர்.

இஸ்ரேலின் மொசாட் அமைப்மை சிறிலங்காவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி அழைத்தபோது 1981 தை 21 ஆம் திகதி மொசாட்டின் முகவர் தி அவ்ர கூ காம் ஜோசப் உடன் பேச்சு வார்த்தை நடாத்தியவர் இன்றை

பாராளுமன்ற சபாநாயகர் எம்.எச்.முகமது. அவர் இன்று விடுதலைப்புலிகளுக்கு இஸ்ரேல் உதவி செய்து வருகின்றது என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்கள் திட்டமிட்டு சிங்கள மக்களால் கொல்லப்பட்டுவருகிறார்கள். அவர்கள் மண்ணில் இருந்து விரட்டப்படுகின்றார்கள். இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்போ அல்லது அரசில் இருக்கும் எந்த முஸ்லிம் அமைச்சர்களோ குரல் கொடுத்தது கிடையாது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தை சிங்கள அரசு சிங்கள மாவட்டமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன் அங்கு பெருமளவில் சிங்களவர்களைக் குடியேற்றுகின்றது. அங்குள்ள அரசாங்க அதிபர் கூட ஒரு சிங்களவர்.
இப்படிச் செயற்படும் அரசு இன்று தாம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடாத்தும் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் குழுவுக்கு தலைவராக ஒரு சிங்களவரை அனுப்பாது முஸ்லிமாக எம். எச். முகமதுவை அனுப்புகிறது.

சிங்கள அரசானது முஸ்லிம் ஊர்காவல்படையைக்கொண்டு தமிழர்களைக் கொல்கின்றது. தனது கூலிப்படைகளைக்கொண்டு முஸ்லிம்களைக்கொல்கின்றது. இதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்தழிக்க முயல்கின்றது.

முஸ்லிம்களின் கொலையை விடுதலைப்புலிகள் மேல் சுமத்துவதன் மூலம் தனது இனப்படுகொலையை சில துரோகிகளின் துணையோடு நியாயப்படுத்துவதன் மூலம் அரபு நாடுகளிடம் இருந்து நிதியையும் ஆயுதங்களையும் பெற நினைக்கின்றது.

சிங்கள அரசின் இத்திட்டமிட்ட சதியைத் தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ளல் வேண்டும். எமக்கும் காத்தான்குடியில் நடைபெற்ற கொலைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படங்கள்: முஸ்லிம்கள் ஆயுதங்களை ஒப்படைக்கும் காட்சிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments