
சேரர்களின் பெயருக்குப் பின்னூட்டாக வரும் “இரும்பொறை” எனும் குடிப்பெயர் தமிழி எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை நடந்த அகழ்வாராட்சிகளில் சங்ககாலச் சேரர்கள் பற்றிய தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் தொல்லெச்சங்கள் கிடைக்கவில்லை.
திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் தற்பொழுது இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வில் ” இரும்பொறை” எனும் எழுத்துப் பொறிப்பு பானை ஓடு கிடைத்துள்ளது. இன்னும் பல தொல்லெச்சங்கள் கிடைத்துள்ளன.
இரும்பொறை என்பது சேரர்கள் பெயருடன் இணைத்துக் கொள்ளும் பட்டம் எ.கா: இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறை, கணைக்கால் இரும்பொறை போன்றப் பெயர்கள்.
இரும்பொறை என்பதற்கு இரும்பு போன்ற பொறுமை, நிதானம் எனப் பொருள்படும். அந்த அளவுக்கு நல்லிணக்கம் உடையவர் எனலாம்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சேமிப்பு ஜாடியின் கருப்பு-சிவப்பு பானையோட்டில் (Black-and-Red ware), ஐந்து தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அது இரும்பொறை. இலக்கியச் சான்றுக்கு