×

பாண்டியர்களும் சமணமும்

பாண்டியர்களும் சமணமும்
=======================≈===

ஈழத்து பாண்டிய அரசர்களாக விளங்கிய காமினி அபயனின் என்ற அரசனின் பத்து புதல்வர்கள் தஸபதிகந்(ன்) எனப்பட்டனர். அவர்களுள் மூத்தவர் தர்மராஜா என அழைக்கப்பட்டார் ,அந்த தர்மராஜா என்பவருக்கு “மஹதிஸ அய ” என்றொரு மகன் இருந்தார்.அந்த மஹதிஸ அய மகள் அபி சவேரா ஆகும் .இதனை IC14, IC15, IC556-569 ஆகிய கல்வெட்டுகள், மன்னர் “மஹ திஸ அய”வுக்கு “சவேரா” என்றொரு மகள் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. தென்னிலங்கை “கொட்டடமு ஹெல”வில் அமைந்துள்ள IC556 முதல் 569 வரையிலான கல்வெட்டுகள், இந்த மஹ திஸ அய மகள் இளவரசி “சவேரா” மற்றும் அவரது கணவரான இளவரசர் “அபய”வின் மகன் இளவரசர் “திஸ” ஆகிய இரு இணையரும் இணைந்து அவர்கள் கடைப்பிடித்த நெறிக்குரிய துறவிகளுக்கு 14 குகைகளை தானமாக வழங்கியதை குறிப்பிடுகின்றன.

அத்தோடு அனுராதபுர மிகுந்தலையில் கிடைத்த IC14 மற்றும் IC15 கல்வெட்டுகள்,இந்த இளவரசி சவேரா தனது பிற்காலத்தில் துறவியானார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் IC14 மற்றும் 556 கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் காணும் போது, ​​மன்னர் மஹா திஸ அய , கணெகம,வின் மன்னர் திஸ (அல்லது கணெகம திஸ) என்றும் அழைக்கப்பட்டார் என்பது தெரியவருகிறது. ஆகவே இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில், இளவரசி சவேரா மற்றும் அவரது கணவரான இளவரசர் திஸ ஆகியோர் தானமாக வழங்கிய அந்த 14 குகைகள் எந்த நெறியைச் சேர்ந்த துறவிகளாக இருக்கும் என்ற தேடல் எழுவது வரலாற்று அடிப்படையில் பல விடைகாணா கேள்விகளுக்கு பதில் அளிக்கும், இவ்வாறான அந்த நெறி மீது ஆழ்ந்த பற்றுடைய சவேரா தானும் பிற்காலத்தில் துறவு துறவு பூண்டது எந்த நெறிக்காக என்ற கேள்விக்கு விடை கிடைக்குமாயின் அந்த நெறி எதுவென அதுவும் அவர்களுடைய வாய்மொழி மூலமாக கிடைக்கும் என்றால் அதைப்போன்ற ஆதாரம் வேறில்லை,எனவேதான் கீழ்வருகின்ற கல்வெட்டுக்கள் அதற்கான பதிலோடு காத்திருக்கின்றன.

ஆகவே இந்த தரவுகளின் அடிப்படையில் ஈழத்து பாண்டியர்கள் காமினி தொடக்கம் இந்த சவேரா வரை கடைப்பிடித்த நெறியாக எது இருந்தது என்பதை நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

IC556 (-569): “கொட்டதாமுஹேல”
“தம ரஜ புத மஹ திஸ அயஹ ஜித அபி சவேரா அயபய ஜ புத திஸ அயஹ அபி சவேராய தநெ , ,ஸகஸ திநெ”

தர்மராஜா மகன் மகாதிசையனுடைய மகள் இளவரசி சவேரா அவளுடைய கணவன் அபயன் மகன் திஸன்” ஆகிய இருவரும் இணைந்து துறவிகளுக்கான இப்பாழிகளை உருவாக்கி அவற்றை அவர்களுக்குத் “தநெ”மாக வழங்கினார், அத்””திநெ””த்தில் உணவும் வழங்கப்பட்டது.

IC14(-IC15): “மிஹிந்தலே”

“கணெகம ரஜச திசஹ ஜித சவேர சமணிய லெணெ’ ஸகஸ”

“கணெகம” பகுதியின் அரசர் (மஹ)”திஸ” மகள் “சவேர” என்ற சமணத் துறவிக் குகை, ஸகஸ – உணவு (துறவு பூணும் நாளில் அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்து அதற்காக வெட்டப்பட்ட குகைத்தளத்தில் அன்று வந்தவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.அதுவோர் பாரம்பரிய கடமையாக கருதி வந்துள்ளனர் என்பதை இவை போன்ற அனைத்து கல்வெட்டுக்களும் குறிப்பாக தெரிவிக்கின்றன. இவை போன்ற பலநூறு கல்வெட்டுக்கள் இருந்தாலும் இவை போன்ற ஓரிரு கல்வெட்டுக்களே அவர்களுடைய நெறியை வெளிப்படையாக அறிவிக்கின்றன. ஏனையவை அவற்றை இன்னாருக்கு என வெளிப்படுத்துவது கிடையாது. ஆகவே கிடைக்கும் இவை போன்ற ஒருசில கல்வெட்டுக்களைக் கொண்டே அவர்களுடைய முந்தைய தானங்களும் ,அதன் நெறியும் எதுவென அறிந்து கொள்ள முடிகிறது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments