
குடா நாட்டு மரங்களிற்தான் குருவிகள் கூடுகட்டியுள்ளன.
முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதும், பொரித்த குஞ்சுகளுக்குப் பயிற்சியளிப்பதும் அங்குதான் என்பதால்…….
மரங்களை வெட்டவேண்டுமென பருந்துகள் தீர்மானமெடுத்தன.
புதிய பருந்து தலைமையேற்றதும் உலகமெஙகும் பறந்து உதவிகேட்டது.
கழுகுகளிடமும், வல்லூறுகளிடமும் கைநீட்டியது.
எங்கும் இனிய வரவேற்பு. மகிழ்ச்சியுடன் திரும்பி வந்ததும் படைநடத்தும் அண்டங்காகங்கள் அறிக்கை சமர்ப்பித்தன. பருந்துகளின் பாதுகாப்புச்சபை கூடி அடுத்த நடவடிக்கைபை ஆராய்ந்தது.
வெட்டரிவாள் வேண்டும், குத்தீட்டி வேண்டும், கடலில் போய்வரக் கட்டுமரங்கள் வேண்டும்.
கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கொல்ல கம்மாலைகள் தேடி அண்டங்காகங்கள் அலைந்து திரிந்து கொண்டுவந்து குவித்துவிட்டே !
குடா நாட்டு மரங்களை வெட்டும் படையெடுப்புக்கு நாட்குறிக்கப்பட்டது.
குஞ்சுகள் அஞ்சாமல் போரிடும்!
அடுத்தகட்டத் தேவைக்குத்தான் அடைவைக்க முட்டைகள் வேண்டும்.
– மாலிகா
– வெளிச்சம்