×

திரு .வேலுப்பிள்ளை  பிரபாகரனை சந்தித்துள்ளேனா என்பதேயாகும்

இலங்கையில்  நான்  பயணித்துக்கொண்டிருந்தபோது  ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில்  என்னிடம்  கேட்கப்பட்ட  கேள்வி  , நான்  திரு .வேலுப்பிள்ளை  பிரபாகரனை சந்தித்துள்ளேனா என்பதேயாகும். ஐயத்திற்கிடமில்லாமல் எனது  அந்தஸ்து  அவரைச்  சந்திப்பதிலேயே தங்கியிருந்தது. நான்  அவரை  சந்திக்கவில்லை  என்ற உண்மையை  கூறினேன். ஆனால்  அவரை  சந்தித்திப்பதையிட்டு  நம்பிக்கையற்ற நிலையில்  நான்  இருக்கவில்லை. ஏனெனில்  இதனைவிட நான்  வேறு  ஒரு  பேற்றை பெற்றிருந்தேன் என்று  சொல்லலாம்.  ஆக்கிரமிப்பை  எதிர்த்துநிற்கும்  தமிழ்  இயக்கத்தின்  உறுப்பினர் சிலரது   ஆழமான  நட்பைக்  கொண்டிருந்தேன்.

இருபது ஆண்டுகளாக  அந்த  இயக்கத்தின்  உறுப்பினர்களை, அவர்களது  தாயகத்திலும், இடம் பெயர்ந்து  அவர்கள்  வாழும்  புலத்திலும்  சந்தித்து  வருகின்றேன்.  அவர்களுடைய  மகிழ்ச்சிகளிலும்  துயரங்களிலும்  பங்குகொள்வதில்  ஒருவித தனியுரிமை  பெற்றிருக்கிறேன்  என்று  கூடச் சொல்லலாம்.  தமிழீழத்தை  அடைவதற்கான  சமர்களில் தங்களது  உயிர்களை  துறந்த  இளம்   ஆண்களினதும்  பெண்களினதும் நினைவுகளை  பேணி காப்பாற்றி  நினைவு  விழாவாக  கொண்டாடப்படும்  மாவீரர்  நாளன்று  தமிழ்  இயக்க  உறுப்பினர்கள்  ஆண்டுதோறும்  ஒன்று  கூடுகின்றனர். இதுவரை  நடந்த  சமர்களில்  உயிர் துறந்த  போராளிகள்  சிலரை  அறிந்திருந்ததோடு, இனிவரும் சமர்களில்   மரணிக்கப்போகும் போராளிகள்  சிலரையும்   நான்  அறிந்திருக்கிறேன் .

தமிழர் தாயகத்தில்  ஏற்பட்டுள்ள  பொருளாதார  அழிவும்  சிதைவும்  கணிக்க  முடியாதது  என்பதை  நான்  உணர்கிறேன். அப்படி சிதைக்கப்பட்ட தமிழர் களது  அமைப்புகளில்  மோசமாக பாழ்படுத்தப்பட்டிருப்பது  அவர்களது  கல்வி  முறைமையேயாகும்  அது படுமோசமாக  வீழ்ச்சியுற்று அழிவு நிலையில் கிடக்கின்றது. போர்க்களங்களில்  மரணித்த 17 ,000 த்திற்கும்  மேற்பட்ட  போராளிகள்  தமது  தாயகத்தில்  அமைதியை நிறுத்தத்தான்  தமது  இன்னுயிர்களை  அர்ப்பணித்தார்களே  நிரந்தரமாக  போரை  நிறுவனப்படுத்துவதற்காக  அல்ல  என்கின்ற  உண்மையை  நாம்  புரிந்துகொள்ள வேண்டும்.  இந்த  நிலைப்பாடு  திரு.  வேலுப்பிள்ளை பிரபாகரனால் கௌரவிக்கப்பட்டு வருகிறது  என்றே நான்  சொல்லுவேன்.

1996 ஆம் ஆண்டு  கார்த்திகை  மாதம்  27ஆம்  திகதி மாவீரர்  தினத்தன்று  அவரால்   நிகழ்த்தப்பட்ட   உரையிலிருந்து சில பகுதிகளை  முனைப்புப்படுத்தி  காட்ட விரும்புகிறேன் .

சமுதாயத்திற்கோ ,பிணக்கிற்கு சமாதானமான முறையில்  தீர்வொன்றை எட்டுவதற்கோ, தமிழீழ விடுதலைப் புலிகள்  எதிரானவர்கள் அல்ல,  சமாதானப்பேச்சுக்கள், இராணுவ  ஆக்கிரமிப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்ட  ஓர்  இசைவான ஒத்துணர்வுள்ள சூழ்நிலையிலேயே  நடைபெறவேண்டும்  என்று  குறிப்பிட்டிருந்தார். 1995 ஆம்  ஆண்டில்  தமிழீழ  விடுதலைப்புலிகள்  சர்வதேச  சமூகத்தின்  மத்தியஸ்தத்திற்க்கு அறைகூவல்  விடுத்திருந்தார்கள்  என்பதையும்  அவர்  தனது  உரையில்  சுட்டிக்காட்டியிருந்தார் .சமாதான பேச்சுவார்த்தைகள்  நடைபெறுவதற்கு முதல்  சுமூகமான  சூழ்நிலையை  உருவாக்குவதற்கு  அவசியமானதாக  வன்முறைத்தணிப்பு, படையினரை மீளப்பெறுதல், சகஜ நிலையை உருவாக்குதல்  போன்றவற்றையே  தமிழீழ  விடுதலைப் புலிகள்  வலியுறுத்துகின்றனர் .

நாங்கள்  2004 ஆம் ஆண்டிலிருந்து  பின்னோக்கிப்பார்ப்போமேயானால், வன்னி  போன்ற  தமது  கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழீழ  விடுதலைப் புலிகளால் ஆயுதம்  தாங்கிய  தமது படைகள்  மீளப்பெறப்பட்டு, இராணுவ  சம்பந்தமில்லாத  நாகரீகமான  ஒரு  சூழ்நிலை  உருவாக்கப்பட்டு  வருவதை  நாம்  அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அப்பகுதிகளில்  சட்டம்  ஒழுங்கும்   மேலோங்கி  செல்வாக்கு பெற்று  வருகின்றன . தேவைக்கு  அதிகமான உற்பத்திப்பொருட்கள்  ஏழை மக்களுக்கு  மீள விநியோகிக்கப்படுகின்றன .

நோர்வேயின்  உதவியுடன்  சர்வதேச  சமூகத்தின்  தலையீடு  இன்று  உண்மையாகிக்கொண்டிருக்கிறது .வன்னியை  அபிவிருத்தி  செய்வதற்கு  புலத்திலுள்ள  தமிழ்  சமூகம்  தனது  தொழில் ரீதியான  ஆற்றலையும்  திறனையும்  அளிப்பதற்கு  முன்வந்துள்ளது.  பேச்சுவார்த்தை  மூலம்  பிணக்கிற்க்கு  தீர்வு  காண்பதற்கான  அடிப்படையாக  ISGA என சுருக்கமாக  அழைக்கப்படும்   இடைக்கால  தன்னாட்சி அதிகார  சபைக்கான  வரைவுகளைக்கொண்ட  ஆவணத்தை  தமிழீழ  விடுதலைப் புலிகள்  முன்வைத்துள்ளார்கள் . சமாதான பேச்சுவார்த்தைகளை  சாத்தியமற்றதாக ஆக்கக்கூடிய  தனிநாட்டுக்  கோரிக்கை, பேச்சு வார்த்தைகளுக்கான  அவர்களது  நிகழ்ச்சி நிரலில்  தமிழீழ  விடுதலைப் புலிகளால்  சேர்க்கப்படவில்லை.  எதிர்காலத்தில்  அமைதியான  ஒரு  தமிழர்  தாயகத்தைப் பற்றிய  கூற்றை  குறிப்பிட்டுவிட்டு  எனது  இந்த  கட்டுரையை  முடிக்க  விரும்புகிறேன்.

வெளியாரின்  வல்லந்தப்படுத்தலாலும்  நெருக்குதலாலும்  இல்லாமல்  தமிழ்  மக்கள்  தமது சொந்த அரசியல்  வாழ்க்கையை தாமே நிர்ணயித்து  சுதந்திரத்துடனும்  கௌரவத்துடனும்  வாழ்வதற்கான  நிலையை வேண்டி நிற்பதாகவே  அவர்  கூறுகிறார். ஈழவரது  சுயநிர்ணய  உரிமையை   அங்கீகரிக்கும்  படியான  வேண்டுகோளையே  அவரது  கோரிக்கை உள்ளடக்கியுள்ளது . இவ்வங்கீகாரம் நிச்சயமாக சமாதானத்திற்கான  பல கதவுகளை  திறந்துவிடும் .

சர்வதேச  சமூகம்  இந்த  தரிசனத்தின்  உள்ளடக்கத்தை  ஏற்கனவே  சரிவரப் புரிந்துகொண்டிப்பதுடன், தெற்கிலுள்ள  தீவிரவாத சக்திகளுக்கும்  எதிரான  நிலைப்பாட்டை  எடுத்து  இதனை  ஆதரிக்கின்றது.  திரு. பிரபாகரனால்  மேற்கொள்ளப்படும்  சமாதான  முயற்சிகளும்  தமிழருக்கு  எதிரான  செயற்பாடுகளை  தடுத்து  நிறுத்தும்   அவரது   இயக்கமும்  வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Pro. Peter Schalk

Social Analyst,

Professor History of religions,

Uppsala University.

Sweden.

The Tamil Resistance Movement on

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments