×

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களை, மாவீரர் நாளில் நினைவு கூருவதற்காக, அங்கு சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற உறவினர்களையும், பொதுமக்களையும், இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இம்முறை விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் தமது உறவுகளான மாவீரர்களை விதைக்கப்பட்ட கல்லறைகள் அமைந்துள்ள இடங்களில் சுடரேற்றி நினைவு கூரலாம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற  அவர்களை, இராணுவ முகாம் வாசலில் இராணுவத்தினர் தடுத்துள்ளனர். அங்கு தமது இராணுவ முகாம் அமைந்துள்ளதாகவும், அதற்குள் எவரும் உள்நுளைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர்.

மாவீரர்களது உறவினர்களுடன் கூடச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர், இவ்விடத்தில் பெருமளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் இருந்தன. அதற்கு மேல்தான் நீங்கள் இராணுவ முகாம் அமைத்துத் தங்கியுள்ளீர்கள். இம்முறையாவது இந்த மாவீரர்களது உறவுகள் தமது பிள்ளைகளை விதைத்த இடங்களில் சுடரேற்றி தமது பிள்ளைகளை நினைவுகூர அனுமதியுங்கள் எனக் கோரியுள்ளனர். எனினும், இராணுவத்தினர் மேலிடத்து அனுமதியின்றி தாம் எவரையும் மாவீரர் துயிலும் இல்லத்தினுள் செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறி மறுத்து விட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே அதிகளவான மாவீரர்களை விதைத்த மாவீரர் கல்லறைகள் காணப்படுகின்றன.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Theravill Maveerar Thuiyilumillam is in Visvamadu.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments