×

புலிகளின் பொறியியல் தொழில்நுட்ப

ஒவ்வொரு மரபு வழிப் படைக்கும் பொறியியல் பிரிவு இருக்கும். ஆங்கிலத்தில் இதை Engineering Corps என்பர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் களமுனை பொறியியல் பட்டாளத்தை (Combat Engineering Corps (Israel)) குறிப்பிடலாம். பொதுவாக கரந்தடி அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட பொறியியல் பிரிவைக் கொண்டிருப்பதில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய ஒரு பிரிவைக் கொண்டிருந்தார்கள்.

வாழ்வோ சாவோ என்ற போராட்டத்தில் போர்த் தொழில்நுட்பமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணி. பல மடங்கு பலம் பொருந்திய எதிரியுடன் en:Asymmetric warfare செய்ய தொழில்நுட்ப வளைவில் முந்தி உந்துவது அவசியமாகிற்று. ஆகையால் தொடக்க காலம் (~1980 கள்) முதலே புலிகள் பொறியியல் துறையில் ஈடுபட்டனர். அது தவிர குறிப்பிடத்தக்க குடிசார் பொறியியல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு, அதன் வரலாறு, கண்டுபிடிப்புகள், முக்கிய நபர்கள் ஆகியவற்றை விவரிக்கும்.

கண்டுபிடிப்புகள்

பசிலன் 2000 உந்துகணை, பசிலன் 2000 உந்துகணைச் செலுத்தி
சமாதானம் 2005
தற்கொலைக் குண்டு அங்கி
மறைவேகப் படகு – stealth boats
ஜொனி மிதிவெடி
ரங்கன் 99 மிதிவெடி
மேஜர் இளவழுதி மிதிவெடி
இலத்திரனிய குண்டு விடுவி
நீர்மூழ்கிக் கப்பல்

தொழில்நுட்ப திறன்கள்
பீரங்கி சூட்டு வலு
செய்மதி தொடர்பாடல்
வானூர்தி  தொழில்நுட்பம்

வான்புலிகள் தாக்குதலுக்குப் பின் ஆய்வாளர் குமார் டேவிட் வரைந்த “Human-capital in knowledge-based societies: Technology and the LTTE” என்ற கட்டுரையில் தொழில்நுட்ப திறனுக்கு வெறும் கருவிகள் மட்டுமல்ல மனித வளமும் முக்கியம் என்று சுட்டி, அது புலிகளிடம் உண்டு என்றும் சுட்டினார். குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு நுட்ப உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments