×

ஊர் நோக்கி – கப்பூது

ஊர் நோக்கி – கப்பூது

ஈழ தேசத்தின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று காணப்படும் இவ்வூர் கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஊராகும்.

இதன் ஒருபுறம் வல்லை வெளியும் அதனூடாக செல்லும் தொண்டைமானாறு இவ்வூருக்கும் கரணவாய் கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.

இரு மரங்கிலும் சிறு களப்பு நிலங்களைக் கொண்ட ஊராகும்

இந்தக் கிராம மக்களின் வாழ்வாதாரம் என்பது நெற்செய்கை, விலங்கு வளர்ப்பு மற்றும் மரக்கறிப் பயிர்ச்செய்கை என்பனவாகும்.

 இயற்கை அழகும் ஒன்றாகக்கொண்ட இந்த ஊரை சுற்றியுள்ள சிறிய கிராமங்களில் இருந்து போர் மற்றும் நகர வாழ்க்கை மோகம் என பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அந்த ஊர்களில் மீளக் குடியமராமல் காடுகள் செழித்து வளர்ந்த தெருக்களாக காணப்படுகின்றன

கப்பூது ஒரு பழங்கால கிராமம், மேலும் கப்பூது முருகன் ஆலயத்தின் வரலாறு போர்த்துக்கீசியர்கள், ஒல்லாந்தர்களின் படையெடுப்புக்கு முன்பிருந்து வாய்வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் நெசவு தொழில் முக்கிய தொழிலாக இருந்த போது, பருத்தி உற்பத்தி செழிப்பாக இருந்ததைக் காட்டிலும், பருத்தி அடைப்பு, பருத்தி வேலி, பருத்தியோலை, பருத்திக்கலட்டி, பருத்திக்குடியிருப்பு, பருத்தித் தீவு (கப்பூது) போன்ற ஊர்களின் பெயர்கள் மூலம் தெரிய வருகிறது.

ஈழத்தின் போராட்ட வரலாற்றில் பல தியாகங்கள் அர்ப்பணிப்புக்களை செய்த மாவீரர்கள் போராளிகள் அறிஞர்கள் படைப்பாளிகள் என பலதுறை ஆற்றல் பெற்றவர்களை பெற்ற கப்பூது ஊர் இன்னும் மண் வாசனை மாறாமல் இருக்கிறது

வட்டக்கச்சி வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments