
“ஒற்றுமையே வலிமை”
காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையாக இருந்தன எப்பொழுதும் அவை ஒற்றுமையாக மேயச் சென்றன.
கொழுத்திருந்த அந்த எருதுகளை சிங்கம் ஒன்று பார்த்தது.அதன் நாக்கில் எச்சில் ஊறியது.
கொன்று தின்ன நினைத்த சிங்கம் அவற்றின் மீது பாய்ந்தது. உடனே நான்கு எருதுகளும் ஒன்று சேர்ந்தன. தங்கள் கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கின. காயம் அடைந்த சிங்கம் அங்கிருந்து ஓடிவிட்டது.
நரி ஒன்றைச் சந்தித்தது சிங்கம். நரியிடம் சிங்கம் கூறியது “அந்த எருதுகளுக்கிடையே எப்படியாவது சண்டையை ஏற்படுத்து. அவை பிரிந்து விடும் அவற்றின் இறைச்சியில் உனக்கும் ஒரு பங்கு தருகிறேன்” என்று கூறியது.
தந்திரசாலியான நரி எருதுகளிடம் வந்தது. அவற்றிடம் அன்பாக இருப்பது போல் நடித்தது. அவற்றுக்கிடையே வேற்றுமையை உண்டாக்க முயற்சி செய்தது.
அதன் சூழ்ச்சி வெற்றி பெற்றது. நான்கு எருதுகளும் சண்டையிட்டுக்கொண்டன.
நான்கு எருதுகளும் தனித்தனியே பிரிந்தன. அவை வெவ்வேறு இடங்களில் மேயச்சென்றன.
தன் எண்ணம் நிறைவேறியதைக் கண்டு மகிழ்ந்த சிங்கம் தனித்திருந்த எருதுகளை எளிதாகக் கொன்று தின்றது.
பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்பின் செல்வர் கஜந்தன் அவர்கட்கு……
துள்ளித்திரியும் வயதினிலே! பள்ளிதனில் பாதம் பதித்து!
பல் கலையினையும் நீ கற்று! பார் போற்ற என்றும் பெருமையுடன் நீ வாழ வாழ்த்தி நிற்கும்……
“கிராமிய அபிவிருத்தி வங்கி”