×

மாவீரன் வாஞ்சிநாதன் (1886 – ஜூன் 17, 1911)

மாவீரன் வாஞ்சிநாதன்
(1886 – ஜூன் 17, 1911)

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த ஒரு வீரர். ஆங்கிலேய ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய புரட்சியாளர்களில் முக்கியமானவர் ஆவார்.

வாஞ்சிநாதன் 1886-ஆம் ஆண்டு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரகுபதி ஐயர் – ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் சங்கரன் ஆகும்.

புனலூர் வனத்துறையில் காவலராகப் பணியாற்றி வந்தார். நாட்டின் விடுதலை மீது கொண்ட பற்றின் காரணமாகத் தனது அரசுப் பணியைத் துறந்தார்.

பாரத மாதா சங்கத்தின் தலைவரான நீலகண்ட பிரம்மச்சாரியின் அறிமுகம் கிடைத்தவுடன், வாஞ்சிநாதன் தன்னை விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களைக் கைது செய்து, சுதேசி இயக்கத்தை நசுக்க நினைத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வில்லியம் ஆஷ் என்பவனை ஒழிக்க வாஞ்சிநாதன் துணிந்தார்.

ஆஷ் வெள்ளைக்காரன் என்பதால் ஆஷ் துரை என்று மரியாதை போட்டு குறிப்பிடும் பழக்கம் நம்ம அடிமை தமிழர்களிடம் இன்றும் உள்ளது அதை விட மிக மோசமானது வாஞ்சிநாதன் பார்ப்பன சமூகம் என்பதால் அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி அடக்கு முறையாளன் ஆக்கிரமிப்பாளான் வெள்ளைக்காரனை மிகவும் நல்லவன் என்கிற தொணியில் திராவிட கட்டுக்கதைகள் மட்டுமே இதுவரை பரப்பப்பட்டு வந்துள்ளன.

வில்லியம் ஆஷை ஒளித்துக்கட்ட முடிவெடுத்து இதற்காக புதுச்சேரியில் தங்கியிருந்த புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் மூலம் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றார்.

1911 ஜூன் 17 ஆம் நாள்
காலை, ஆஷ் தனது மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்வதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் காத்துக் கொண்டிருந்தார்.
வாஞ்சிநாதன் தனது சகா சங்கர கிருஷ்ணனுடன் சேர்ந்து, ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் நுழைந்து, மறைத்து வைத்திருந்த ‘பிரௌனிங்’ துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றார்.

ஆஷை சுட்ட பின், வாஞ்சிநாதன் அங்கிருந்து தப்பியோட முயலவில்லை. பிரிட்டிஷ் போலீசாரிடம் உயிரோடு சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ரயில் நிலையத்தின் கழிவறைக்குச் சென்று, அதே துப்பாக்கியால் தனது வாய்க்குள் சுட்டுக் கொண்டு வீர மரணம் எய்தினார்.
அப்போது அவருக்கு வயது வெறும் 25 மட்டுமே.

அவரது சட்டையிலிருந்த கடிதத்தில், நாட்டின் விடுதலைக்காகவும், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்தச் செயலைச் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

வாஞ்சிநாதனின் இந்த வீரச் செயலை நினைவுகூரும் வகையில், அந்த ரயில் நிலையம் இன்று”வாஞ்சி மணியாச்சி” சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.

தமிழக வரலாற்றில் ஆங்கிலேய அதிகாரியைத் தேடிச் சென்று சுட்டுக் கொன்று, தன் உயிரையும் தியாகம் செய்த முதல் புரட்சியாளராக வாஞ்சிநாதன் போற்றப்படுகிறார்.

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments