
ஊர் நோக்கி – வன்னிவிளாங்குளம்
வன்னிவிளாங்குளம் ஈழத்தின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறப்புமிக்க ஒரு கிராமமாகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதாகும். மாங்குளம் நகரத்திலிருந்து மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம்,
இயற்கை வளங்களும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ஒரு முக்கியமான இடமாகக் காணப்படுகிறது.
பழமையான காலங்களிலிருந்தே வன்னி பகுதி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாகப் போற்றப்பட்டது. அதில் வன்னிவிளாங்குளமும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இங்கு காணப்படும் நீர்நிலைகள், குளங்கள் மற்றும் வளமான நிலங்கள் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளன. குறிப்பாக நெற்பயிரிடல், கால்நடைப் பண்ணைகள் போன்றவை கிராம மக்களின் முதன்மை தொழில்களாகும்.
வன்னிவிளாங்குளம் கிராமம் இயற்கை அழகினாலும் அமைதியான சூழலாலும் தனித்துவம் பெறுகிறது. பசுமையான வயல்கள், மரங்கள் சூழ்ந்த நிலப்பரப்புகள், நீர்நிலைகள் ஆகியவை கிராமத்தின் அழகை மேலும் உயர்த்துகின்றன. இருவாட்டிப் பறவைகள் மற்றும் விளாமரங்கள் என்பனவும் வனம் நிறைந்து முல்லை நிலச்சூழந்த ஊராகும்
இதனால் இயற்கையை நேசிக்கும் மக்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.
இக்கிராமம் போரின் தாக்கத்தையும் அனுபவித்துள்ளது. பல ஆண்டுகளாக ஏற்பட்ட போரினால் மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், போருக்குப் பிறகு மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மூலம் கிராமம் மீண்டும் வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது.

ஈழ போரியல் வரலாற்றில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக திகழ்ந்தது வன்னிவேளாங்குளம்.அத்தோடு வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம் மற்றும் அம்மன் ஆலயங்கள் என்பன இவ்வூரின் தனிச் சிறப்பாக காணப்படுகிறது போரில் பல தியாகங்களையும் இழப்புக்களையும் சந்தித்த இவ்வூரில் மாவீரர் குடும்பங்களுக்கான ஒர் குடியிருப்பு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. தேக்கம் காடுகளும் அங்கு வாழும் வன விலங்குகளும் பறவைகளும் முல்லை நிலச் சிறப்பைக் காட்டும்
பல கல்வியாளர்கள் கலைஞர்கள் படைப்பாளர்கள் கவிஞர்கள் போராளிகள் மாவீரர்கள் என பலரை இந்த மண்ணுக்கு தந்த ஒரு பாரம்பரிய கிராமம் வன்னிவிளாங்குளமாகும்.
வட்டக்கச்சி வினோத்