
“வெண்காஸிபன் கொடுபித கல் கஞ்சனம்”
இது தமிழக நெல்லை மாவட்டம் மாறுகால்தலை என்ற இடத்தில் காணப்படுவது.
வெண்காஸிபன் என்பவனுக்கு கற்படுக்கை அல்லது கற்பாழி அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பதே இதன் பொருள்.இவர் ஓர் மாமுனிவர் ஆகவே இவருக்கு கொடுக்கப்பட்டது என்பதே சரியானது.இவரால் கொடுக்கப்பட்டது என்பது பிழையானது,இவர் குறித்த ஈழத்து கல்வெட்டு ஒன்று புல்மோட்டை,கல்நீராவி என்ற இடத்தில் காணப்படுகிறது அது “ஸமண சுட கஸபஹ” என்று கூறுகிறது.
மணிமேகலை தொடக்கம் மகாவமசம் முதல் இவரை பூரண காயபர் என்கிறது, இவர் கழிவெண்பிறப்பு என்ற நிலையை எய்தியதால் அவரை பூரணர் வெண்காயபர் என அழைப்பர்.இவரது கல்வெட்டுக்களை நுன்னாய்வு செய்த போது இவர் ஐம்பூதக்கோட்பாட்டை கொண்ட பூதவாதி என்பதை தெளிவாக உரைக்கிறது,இவர் கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதும் புலனாகிறது.இவரது பாதபீடிகையே சிவனொளிபாத மலையிலும்,பற்தாதுவே கண்டி தலதா மாளிகையிலும் வைத்து வணங்கப்படுகிறது. பெளத்தர்கள் அவரை காஸப புத்தர் என விளிப்பர்.