
“ உங்களிற்கு கோபம் வரவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்”
தலைவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.
“ எம் இனத்திற்கெதிராக எதையாவது செய்யுங்கள், அப்போது பார்ப்பீர்கள் என் கோபத்தை” தலைவர் வழங்கிய பதில் இது ஆகும்.
இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. எமக்கெதிராக எம்மக்களை அழித்தவர்களை தேடித்தேடி அழித்து கணக்குகளை சமன் செய்த வரலாறு நாம் அறிவோம். தலைவனைப்போலவே போராளிகள், மற்றும் தளபதிகள் இருந்தார்கள் என்பதுதான் தமிழர்கள் பெற்றிருந்த வரம்.
தலைவனால் எல்லாமே கற்பிக்கப்பட்ட வரலாற்றின் மிகப்பெரும் அதிசயம் எம் மறவர்கள்.
![]()