
ஈழத்து கல்வெட்டுக்களில் பாகதம் இடம்பெற்றதற்குரிய காரணம் என்ன?
IC 268 (ரிதிக்கல) மஹமத பமத்தத புத பருமக புஸகுத்த கரிதெ பத தூப. இந்த ரிதிகல கல்வெட்டுக்கூறும் மஹமத பமதத்த புத புஸகுத்த யார்?
IC 269 (ரிதிக்கல) மஹமத பமதத்த புத பருமக பதிகெ பருமக புஸகுத்த பருமக மித்தெ, பருமக திஸெ கரிதெ அரித மஹகமெ,என்று உரைப்பதால் IC 373 (வெடுக்குநாறிமலை)
மஹசமுத்த புத குத்தஹ லெணெ ஸகஸ,பருமக பமதத்த புத ஹ மஹகுத்தஹ லெணெ. என்பதன் ஊடாக இந்த மஹசமுத்த என்பவர்தான் மஹமத பமதத்த என்பதை மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிவதோடு அவருடைய மகனாக விளங்கிய மஹமத பமதத்த புத புஸகுத்த என்பவர்தான் மஹகுத்தஹ எனவும் அறிந்துகொள்ள முடிந்தது,அவை பற்றிய தேடலில் இந்த மஹசமுத்த என்பவருக்கு பதிகெ,புஸகுத்த,மித்த,திஸ என 4 ஆண் மகன்கள் இருந்ததையும் அந்த ஆண்மகன்களில் ஒருவராகிய மஹகுத்தக என்பவர் வெடுக்குநாறிமலை கல்வெட்டில் குத்தஹ,மஹகுத்த, என விளிக்கப்படும் புஸகுத்த என்பதையும் கண்டு கொண்டோம், அடுத்து இந்த மஹசமுத்த என்பவரது இன்னொரு மகனாகிய மித்த என்பவருடைய மகன்தான் சுடி நாக என்பவர் என்பதற்கான கல்வெட்டு IC375 பருமக புஸமித்த புத ஹ மஹ லெணெ ,அதாவது இந்த மஹசமுத்த மகானாகிய (புஸ) மித்த புத மகனது பெரும்பாழி என்கிறது,எனவே யார் அந்த பெரும் பாழியை கொண்ட புஸமித புத என்ற தேடலுக்கு பதிலாக IC 374 பத சுடி திஸஹ லெணெ என்கிறது, எனவே இந்த பத சுடி திஸ என்பவர்தான் இந்த மஹசமுத்த உடைய மகன் புஸமித்தனின் மகன் ஆகும்.
எனவே கீழ்வரும் கல்வெட்டு கூறும் பத திஸ குத்த ஹ லெணெ,கோதம ஸமணெ கரபிதெ என்ற பாழியை கோதம ஸமணெ என்பவருக்கு தானமாக அளித்த பத திஸ குத்த என்பவரும் இந்த மஹமத பமதத்த குத்தஹ என்ற மஹசமுத்த மகன்களாகிய பருமக பதிகெ பருமக புஸகுத்த பருமக மித்தெ ,பருமக திஸெ என்பவர்களில் ஒருவராகிய பருமக திஸெ என்பதை கண்டுகொள்ள முடிகிறது. ஆகவே, கீழ்வரும் கல்வெட்டு கூறுகின்ற பருமக அபய புத திஸ ஹ நவிகெ லெணெ,கோதம ஸமணெ கரபிதெ.
என்பதன் ஊடாக மிகத்தெளிவாக விளங்குவது யாதெனில் இந்த மஹமத பமதத்த என்ற மஹசமுத்த என்பவர்தான் பருமக அபய என இந்த கல்வெட்டு உரைக்கும் கமணி அபய என்றும் அவருடைய மகனாகிய பருமக அபய புத திஸ என்பவர்தான் கமணி அபய மகன் கமணி திஸ என்றும் கண்டுகொள்ள முடிந்தது. எனவே
பகவத கோதம ஸமணெ மொகலி பு(த்)த தெரஹ,ஸரி பு(த்)த தெரஹ,புஸ தெரஹ,புந தெரஹ ஸதிவிஹரிய அகத அநகத ஸதுதிஸ ஸகஸ,பருமக அபய புத பருமக எரக என்ற கல்வெட்டு ஊடாக இந்த இந்த மொகலி புத்த தெரஹ என்பவர் மற்கலி கோசாலர் என்ற கமணி அபய தந்தையாகிய கமணி உதி என்பவர் என்பதை IC 1045 ஸகஸ,பமண மொகலி புத பருமக மஜிம புத தத்தஹ லெணெ, என்பதன் ஊடாக இந்த மொகலி புத மஜிம என்பதையும் அந்த மஜிம புத தத்தஹ என்ற பமண(அமண/அந்தணர்)பெயரை பெற்றிருந்தார் என்பதையும் கண்டுகொள்ள முடிவதோடு…
இந்த மஜிம என்பவர்தான்…
கமணி திஸஹ பிதஹ ஸ மஜிமரஜ ஹ ச நியத கமணி ஸ பரிபொகநி ஸகஸ,கிரிதிஸகமெ,கரஜிநிதிஸகமெ,விலகமெ,கஸபநகரெ,மளுகமெ தொகபிகெ, என்பதன் வாயிலாக கமணி திஸ தந்தையான கமணி அபயன்தான் இந்த மஜிமரஜ என்பவன் என்பதையும்,அந்த மஜிம புத தத்தஹ என்பவன் கமணி திஸ என்பதையும் கண்டு கொள்ள முடிவதோடு பமண மொகலி புத பருமக மஜிம என்பதன் ஊடாக இந்த மொகலி கோதம சமணெ என்ற மற்கலி கோசாலர் கமணி அபய தந்தையும் ஈழத்தின் முதன்மை தெவநபி கமணி உதி என்ற பட்டம் கொண்ட பாண்டிய வேந்தரும் ஆவார்,எனவே இந்த தெவநபி கமணி உதி என்ற பட்டத்துக்குரிய முதல் வரலாற்று பாண்டிய வேந்தர் மற்கலி கோசாலர் ஆகும். இவர் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்,இந்த மற்கலி கோசாலர் ஈழத்தை ஆட்சிபுரிந்த காலத்தில் சாக்கியமுனி என்ற கோதம புத்தர் பிறந்திருக்கவில்லை, அதற்கு அடுத்து இந்த மற்கலி கோசாலருடைய மகன் மஜிமரஜ என்ற கமணி அபய ,தெவநபி கமணி அபய என்ற பாண்டிய வேந்தன் ஆகிறார்.
அவருக்கு அடுத்து இந்த மற்கலி கோசாலருடைய பேரனும் மஜிமரஜ புதல்வருமாகிய கமணி திஸ தெவநபி கமணி திஸ என்ற பட்டம் கொண்ட பாண்டிய வேந்தன் ஆகிறார்,அவரின் பின்பாக இந்த கமணி திஸ மகனும் மற்கலி கோசாலருடைய பூட்டனுமாகிய திஸ என்பவன் தெவநபி திஸ என்ற பட்டம் கொண்ட பாண்டிய வேந்தன் ஆவதுடன் இந்த பாண்டியகுல வேந்தர்களுடைய குலமும் ஈழத்தில் வழக்கொழிந்து போவதையும் அதன் பின்பாக வந்த எந்தவொரு அரசரும் இத்தகைய பட்டத்தை பெற்றதையோ,அல்லது இந்த பாண்டியகுல ஆட்சி தொடர்ந்தையோ சிறப்பித்துக்கூறவில்லை,பாளி ஏடுகள் கூறுவது கல்வெட்டு,நாணய வரலாற்று சான்றுகள் அல்ல.
மேற்படி பாண்டிய வேந்தர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் பழந்தமிழகத்தில் இவர்கள் தவிர்ந்த சேர,சோழ அரசுகளும் தோற்றம் பெற்றிருந்ததாகத் தெரியவில்லை,முழு நாவலந்தேயமும் இந்த பாண்டிய வேந்தர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டும்,அவர்கள் தவிர்ந்த வேள் புல ஆட்சியாளர்களது அதிகாரத்திலுமே இருந்ததாக அறியமுடிகிறது,இதனையே சங்ககால பாடல்களும் தமிழகத்தின் எல்லையாக இமயம் முதல் குமரியின் தெற்கும் என விதந்து கூறுகிறது,இந்த பாண்டிய அரசர்கள் எகிப்திய,யூத அரசர்களோடு வணிகத்தில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது,கிரேக்கர்களும் இவர்களை விதந்து கூறுவதால் இவர்களுடைய புகழ் அங்கும் பரவியிருந்தது என அறிய முடிகிறது,மகா அலெக்சான்டருடைய படையெடுப்பால் தோன்றிய மோரியர் ஆட்சி சேர வேந்தர்களுடைய தோற்றத்தின் பின்பாக எழுந்ததால் இந்த பாண்டியர்களுக்கும் உரோமர்களுக்கும் வணிகம் இடம்பெறவில்லை, அவர்கள் இந்த உரோம இராச்சியம்,கிரேக்க அலக்சான்டருடைய வருகைக்கு முற்பட்டவர்கள்,மோரியர்களும் இவர்களுடைய காலத்தில் கிடையாது, ஆகவேதான் இந்த பாண்டியர்களுடைய ஆட்சியதிகாரம் மிக்க இமயம் முதல் குமரி தெற்குவரை கல்வெட்டு தாய்மொழியான தமிழில் அல்லாது பொது மொழியான பிராகிருத்தில் அமைந்தது, அந்த பிராகிருத பெயர்களில் உள்ள ஆசீவக துறவிகளாகிய பூரணர் (மதுரை ஓலைக்கடயத்தனார்),நரிவெருஉத்தலையார், பக்குடுக்கை நற்கணியனார்,போன்றவர்களுடைய சங்ககால பாடல்கள் தமிழில் அமைந்தன.