×

டாக்டர் செண்பகராமன் முந்தைய திருவாங்கூர் அரசின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் தமிழராகப் பிறந்த

டாக்டர் செண்பகராமன் முந்தைய திருவாங்கூர் அரசின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் தமிழராகப் பிறந்த, ஒரு புரட்சிகர இந்திய தேசியவாதி ஆவார். பிரிட்டிஷ் படைகளைப் போரில் வென்று இந்திய விடுதலையைப் பெற ஓர் இந்திய படையை வெளிநாட்டில் நிறுவுவது என்ற திட்டத்திற்கு ராஷ்பிகாரி போஸ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு செண்பகராமனே முன்னோடி ஆவார் .1933-இல் செர்மனியில் செண்பகராமனை சுபாஷ் சந்திரபோசு சந்தித்தபோது இந்திய தேசிய இராணுவம் உருவாக்குவதற்கான சிந்தனை பிறந்தது.

1914 சூலை மாதம் பிரிட்டிஷ் இந்தியப் படையில் இந்திய வீரர்கள் புரட்சி செய்யுமாறும் பிரிட்டிஷாரை எதிர்த்துப்போரில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்தார். ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பினார்.

ஜெர்மானியப் போர்க் கப்பல் எஸ். எம். எஸ் .எம்டன்,1914 செப்டம்பர் 22 ஆம் நாள் இரவு சென்னை நகரைத் தாக்கியது. அக்கப்பலை இயக்கிய குழுவில் செண்பகராமன் இருந்ததாகச் சொல்லப்பட்டது. 1915 டிசம்பர் 1ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் காபூலில் ராஜா மகேந்திர பிரதாப் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியாவுக்கான தற்காலிக அரசில் செண்பகராமன் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப்போரிட உதவிபெறும் நோக்கில் அடால்ப் இட்லருடன் தொடர்பு கொண்டார். ஆனால், இன்னமும் இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் திறன்னற்றவர்கள் என்ற இட்லரின் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பினார். எழுத்துப்பூர்பமாக இட்லரை மன்னிப்புக்கேட்க வைத்தார். அடாலப் இட்லரின் ஆணையின்படி , நாசிக்கள் உணவில் சிறுகச் சிறுகக் கொல்லும் நஞ்சு கலந்ததின் விளைவாக செண்பகராமன் 1934 அதே மாதம் 26 அன்று உயிரிழந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments