×

இப்படம் இலங்கையின் அனுராதபுர மாவட்டத்தின் பதவியா (Padaviya)

இப்படம் இலங்கையின் அனுராதபுர மாவட்டத்தின் பதவியா (Padaviya)

பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகக் குழுவின் முத்திரை (Seal) ஆகும். இவ்விடத்தின் பெயர் ஆரம்பத்தில் பதவி என தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் பதவியா என சிங்களமயப்பட்டது.

இந்த முத்திரையின் முக்கிய அம்சங்கள்-

1. மையக் குறியீடுகள்
நந்தி:நடுவில் அமர்ந்த நிலையில் காளையின் உருவம் கம்பீரமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மங்கலச் சின்னங்கள்: நந்தியின் இருபுறமும் குத்துவிளக்குகள் உள்ளன. தலைக்கு மேலே சாமரம், கொடி அல்லது குடை போன்ற அரச/வணிகக் குழுவின் மங்கலச் சின்னங்கள் மற்றும் பிறை நிலா காணப்படுகின்றது.

2. எழுத்துப் பொறிப்பு (விளிம்பு வாசகம்)
வட்ட வடிவ விளிம்பைச் சுற்றி தமிழ் எழுத்துக்களில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அவெழுத்துப் பொறிப்பில் இடைக்காலத்தில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் செல்வாக்குப் பெற்று விளங்கிய “திசையாயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற புகழ்பெற்ற தமிழ் வணிகக் கூட்டமைப்பின் வாசகமான “ஸ்ரீமத் திசையாயிரத்து ஐந்நூற்றுவர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தகவல்

இடைக்கால இலங்கையில் (குறிப்பாக சோழர் ஆட்சி காலத்திலும் அதற்குப் பின்னரும்) பதவியா ஒரு முக்கிய வர்த்தக மற்றும் நிர்வாக மையமாக விளங்கியது. இங்கு பல தமிழ் வணிகக் குடியிருப்புகளும், சிவாலயங்களும் இருந்துள்ளன. இன்றும் அவற்றின் சிதைவுகளைப் பார்க்க முடியும். இந்நகரத்தில் தமிழ் வணிகக் குழுக்களின் ஆதிக்கம் வெகுவாக காணப்பட்டமைக்கான ஆதாரமே இந்த முத்திரை ஆகும்.

நானாதேசியர், ஐந்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற வணிக கணங்கள் தமக்கென சொந்தப் படைகளையும், தனியான நாணயங்கள், முத்திரைகள் மற்றும் ஆவணப் புழக்கங்களையும் கொண்டிருந்தனர். தங்களின் பண்டப் பொதிகள், கடிதங்கள் மற்றும் சாசனங்களை உறுதிப்படுத்த இத்தகைய முத்திரைகளைப் பயன்படுத்தினர்.

 

guest
0 Comments