×

ஈழத்தின் தொன்ம மொழியும் தொல்லியல் ஆதாரங்களும்

ஈழத்தின் தொன்ம மொழியும் தொல்லியல் ஆதாரங்களும்
இலங்கையில் காலத்தால் முந்தைய வடபிராமி எனப்படுகின்ற ஈழத்து பாகத மொழி எழுத்துக்கள் பெளத்தமதம் கி.மு 270 இல் இங்கே பரவுவதற்கு முன்பாக உள்ள மச்சிமஹராசா போன்ற உருகுணை பாண்டிய வம்சத்தினருடைய கல்வெட்டுக்கள் ஊடாக கி.மு 4 ஆம் ஆண்டளவில் இருந்து அறிமுகமாவதற்கு முன்பாகவே தென்பிராமி எனப்படுகின்ற தமிழி எழுத்து வடிவம் புழக்கத்தில் இருந்ததை ஆய்வாளர் கருணாரத்தின கூறுகிறார்.
அவற்றுள் ” ந” “ன” “ற” ”ள’ என்ற நான்கு எழுத்துக்களும் பிராகிருத, சமஸ்கிருத, தெலுங்கு,கன்னட அல்லது வேறெந்த மொழிகளிலோ காணப்பட முடியாதவை. இவ்வெழுத்துக்கள் தென்பிராமி எனப்படுகின்ற தமிழியின் பயன்பாட்டில் இருந்ததைச் அவர் பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது (Karunaratne 1984:32). எனவே தமிழே இலங்கையிலிருந்த மிகத் தொன்மையான மொழி என்பதும் இதனை கி.மு 7 ஆம் நூற்றாண்டுக்குரிய ஈழத்தீவின் நாகநாட்டு பாண்டிய மன்னனுடைய சே”ந்”த”ன்” மா”ற””ன்” நாணயம் ஊடாக உறுதிப்படுத்த முடிகிறது.
எனவே ஈழ தீவில் நாகநாட்டின் கண் விளங்கிய தமிழி மொழிக்கு மட்டுமே உரிய ” ந” “ன” “ற” ”ள’ போன்ற எழுத்துக்களும் கூடிய வே”ள்” “நா”க”ன்” , கண்ண”ன்” மணி”நா”க”ன்” போன்ற அன் விகுதி கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள் ,சின்னங்கள் தமிழருடையவை. இத்தொல்லியல் ஆதாரங்களை பேணிக்காப்பதும் இவை குறித்த தொல்லியல் அறிவும் அவை தொடர்பான புலமையும்,மிக முக்கியமாக அரசியல் பார்வையையும் ஈழத்தமிழர்கள் கொண்டிருப்பது காலத்தின் தேவையாகும்.
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments