
” பழந்தமிழ் எழுத்து.” சங்க காலக் காட்சி ஒன்று..
பொருளீட்டும் நோக்கத்துடன் தலைவியைப் பிரிந்து தலைவன் காடு வழியே செல்கிறான். வழியில் ஒரு பழமையான நடுகல் ஒன்றைப் பார்க்கிறான். ஆகோள் பூசலில் ஈடுபட்ட வீரன் ஒருவன் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் அது. அந்த நடுகல்லில் குயில் எழுத்து என்னும் பழமையான எழுத்துமுறையால் விபரங்கள் எழுதப்பட்டிருந்தது.
அகம் பாடல்.297
“மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து”
ஆகவே..
பழந்தமிழர்களிடம் ஒரு எழுத்து முறை இருந்தது. அது குயில் எழுத்து என்று அழைக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்து பழந் தமிழி எழுத்துக்கு முன்பான குறியீடுகள் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.
மா.மாரிராஜன்.