×

அடிபாட்டுச் சப்பாத்து 

அடிபாட்டுச் சப்பாத்து 

இவர்களின் சண்டைச் சப்பாத்து ஏனைய சப்பாத்துகளைப் போல இருந்தாலும் இதனில் ஒரு வேறுபாடு உண்டு. அதாவது இவர்களின் சப்பாத்துகளில் கால் உள்ளுடுத்தும் வாயின் கீழ்ப்பகுதியிலிருந்து மேனோக்கி வரித்துணி தைக்கப்பட்டிருக்கும். (கீழே படத்தில் காண்க). இது எப்பொழுதும் புலிவீரர்களால் அணிந்திருக்கப்படவில்லை. சமர்க்களங்களில் இதை அவர்கள் அணியார். ஆனால் குறிப்பாக அணிநடைகளின் போது பங்கேற்கும் அனைத்துப் புலிவீரர்களும் இதை அணிவர். அதே சமயம் பயிற்சிகளின் போதும் இதை சிலர் அணிவதுண்டு.

இச்சப்பாத்தின் பக்கவாட்டு உருமறைப்பு தரைப்புலிகளுக்கு (தரைச் சிறுத்தைப்படை & காட்டுச் சிறுத்தைப்படை உம் கூட) பச்சை வரிப்புலியிலும், கடற்புலிகளில் தரைப்பணிச் சீருடைக்கு மட்டும் நீல வரிப்புலியிலும் இருந்தது. கடற்கலவர், கரும்புலிகள் மற்றும் வான்புலிகள் ஆகியோருக்கு எந்தவொரு வரித்துணியும் தைக்கப்படாமல் வெறுமனே கறுப்பு நிறத்தில் இருந்தது.

தரைப்புலிகள்:

கடற்புலிகள் & சிறுத்தைப்படை:

கீழுள்ள படிமத்தில் வலது பக்கத்தில் கடற்புலி தரைப்பணிச் சீருடை அணிந்தபடி நிற்கும் பெண் போராளியின் சப்பாத்தை நோக்குக.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments