
தமிழீழ மக்களுக்கெதிரான கடுமையான பொருண்மியத் (பொருளாதாரத்) தடை!
தமிழ் மக்களுக்கெதிரான உணவு தடை, எரிபொருள், மின்சாரத் தடை, உள்ளீட்டு பொருட்கள் தடை, காகிதம் மற்றும் அப்பியாச புத்தகங்கள் தடை, போக்குவரத்து முடக்கம், வேலை வாய்ப்பு முடக்கம், கடல் தடை, கைத்தொழில் முடக்கம், உரம், விதை, கிருமிநாசினி தடை, உழவு எந்திரம், உழவு கருவிகள் தடை, பேட்டரி தடை போன்ற கடுமையான பொருளாதார தடையை ஓட்டுமொத்தமாக தமிழர் தாயகத்தின் மீது 1990 ஜூன் மாதம் சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியது.
இவ்வாறான கொடூரமான தடைகள் தமிழீழ மக்களுக்கெதிராக ஏவி விடப்படும் என முன்யோசனையுடன் ஆய்வு, அபிவிருத்தி வேலைத் திட்டங்களை 1983லிருந்தே ஆரம்பித்ததன் பயனாக தடைகள் அறிவித்தவுடன் நிலைகுலைந்து போகாமல் எதிரியிடம் மண்டியிட்டு சரணடையாமல் சுறுசுறுப்பாக ஆக்கத் திறனுடனும் செயல் திறனுடனும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தனது திட்டங்களை முன்னுரிமைபடுத்தி போர்க்கால அடிப்படையில் அமுலாக்க தொடங்கியது.
அதன் ஒரு அம்சமாக இந்த பத்திரிகை குறிப்பில் வந்த செயல் திட்டம் மக்கள் முன் ஜூலை 1990 இல் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வாறான சாதுரியமான நகர்வுகள் பொருண்மிய (பொருளாதார) தடைகளை வெற்றி கொண்டன. பல்லாயிரம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியது.
![]()
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்