
கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார்
கிருசாந்தி கொலை நடந்து சரியாக 27 நாளில் இன்னொரு பெண்ணும் அதே மாதிரி உரும்பிராயில் கொலை செய்யப்பட்டார். ரஜனி என்ற அந்த பெண்ணின் கொலை கிருசாந்தி கொலை அளவுக்கு பேசுபொருளாகவில்லை. ஆனால் அந்த கொலைசெய்த இராணுவமும் தண்டனை பெற்றது. அதற்கான காரணம் திரு. குணநாயகம் அவர்கள். ரஜனி கொலையான சில நாட்களுக்குள்ளேயே சம்பந்தப்பட்ட இராணுவத்தை கைது செய்ய வைக்க காரணமானவர்.
இவர் ஒருவர்தான் அந்த வழக்கின் சாட்சி.
ரஜனி கொலை ஊடகங்களில் பெரிதாக வராமல் அரசு பார்த்துக்கொண்ட காலம். 1996 யில் இராணுவத்துக்கு எதிராக துணிந்து தனிமனிதனாக சாட்சி சொல்ல எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கனும். இத்தனைக்கும் ரஜனி இவரின் சொந்தக்கார பிள்ளை கூட இல்லை. அந்தப்பிள்ளையை சம்பவ தினத்திற்கு முதல் அவர் கண்டதே இல்லை.
அப்படியிருந்தும் ஒரு பொம்பிள்ளை பிள்ளையை சீரழிச்சிட்டானுகளே என்று 14 வருடங்கள் தொடர்ந்து கொழும்பு போய் சாட்சி சொல்லி 1996 நடந்த அந்த கொலைக்கு 2011 யில் தண்டனை பெற்றும் கொடுத்தார். அதற்காக அவர் செலவழித்த சொந்த காசு கிட்டத்தட்ட 15 லட்சம்.
அந்தக்காலத்தில் 15 லட்சம் என்பது பெரிய தொகை. காரணமேயில்லாமல் ஆட்களை சுட்டுக்கொல்ல கூடிய வாய்ப்பிருந்த காலத்தில் துணிந்து இராணுவத்துக்கு எதிராகவே சாட்சி சொன்ன அவரது துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும்.
யார் யாருக்கோ விருது கொடுக்கும் சமூக அமைப்புக்கள் ஐயாவை கூப்பிட்டு கெளரவப்படுத்தினால் உங்களுக்கும் கெளரவம் கிடைக்கும்.
(முதலாவது படம் அவர் மனைவி யமுனா குணநாயகத்துடன்)