×

“கிழக்கை விட்டு சென்றால் வடக்கில் சுயாட்சி”

“கிழக்கை விட்டு சென்றால் வடக்கில் சுயாட்சி” –இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி திரு. பிரேமாதாச – “வடக்கை வேண்டும் என்றால் விட்டு செல்கிறேன் ஆனால் கிழக்கை விடமுடியாது” -தமிழீழ தேசியத்  தலைவர் மேதகு  பிரபாகரன்.

ஜனாதிபதி  பிரேமதாச விடுதலை புலிகளிடம் கிழக்கை விட்டுசென்றால் வடக்கில் சுயாட்சி அமைக்க வழிவகுப்பதாக கூறினார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதில்: வடக்கை வேண்டும்என்றால் விட்டு செல்கிறேன் ஆனால் கிழக்கை விடமுடியாது’ என்று பதிவிட்டேன்.

அந்த தகவலை  நான் எப்படி அறிந்தேன் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன் .

–  அருண் தம்பிமுத்து

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நான், மற்றும்முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன்மூவரும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சம்மந்தமாகபேசிக்கொண்டு இருந்தோம்.

– பிரபாகரனிடம் பிரதேச வேறுபாடுகள் இருந்ததால் தான்கருணா பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டது என்ற கருத்தை லலித்வீரதுங்க கூறினார். ‘I don’t think so Lalith’  என்று வீரக்கோன்குறுக்கிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டகாலத்தில் (1989-90), புலிகள் சார்பாக பேச்சுவார்த்தை நடாத்திய யோகி, பாலசிங்கம், மாத்தயா  விடம்  பிரேமதாச நேரில்கூறியதாக வீரக்கோன் சொன்னார் –

‘கிழக்கில் சிங்களவரும் முஸ்லிம்களும் இருப்பதால், புலிகள்கிழக்கில் இருந்து ராணுவ ரீதியில்  வெளியேறினால் நாங்கள் வடக்கை மையமாக வைத்த ஒரு தீர்வுக்கு வரலாம் என்றும்…

…மேலும், கிழக்கில் இருந்து புலிகளை அகற்றி விட்டால் பின்வடக்கை ராணுவ ரீதியில் வெல்லலாம் என்ற கருத்து அக்காலத்தில் இருந்ததாகவும், ஆனால் பிரபாகரன் பிடிகொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்…

…எங்கள் தலைவர் பிரபாகரனிடம் பேசிவிட்டு பதில் கூறுகிறோம்  என்று பாலசிங்கம் கூறியதாக சொன்னார். தங்களது அடுத்த சந்திப்பில் பாலசிங்கம் ஒரு கடதாசியை வாசித்ததாக, எமது தலைவர் பிரபாகரன் கூறுகிறார் திரு. பிரேமதாச விடம் சொல்லுங்கள் நாங்கள் வடக்கில் இருந்து வெளியேறினாலும் கிழக்கில் இருந்து வெளியேறமுடியாது. கிழக்கை உள்ளடக்காத  எந்த ஒப்பந்தத்திற்கும் வரமுடியாது என்று இந்த விடயத்தை கூறிய முன்னாள் ஜனாதிபதி செயலாளர் வீரக்கோன் மட்டக்களப்பு அரசாங்க அதிபராக 70 களில்பணியாற்றியவர்!

‘In the East Muslims and Sinhalese are living, if the LTTE militarily withdraws from East, we can come to an amicable agreement in the North” he added further, “the thinking was that if LTTE could be confined only to the North, they can be militarily defeated on a later day! But Prabakaran never took the bait”

Balasingam has told, we will inform our leader Mr. Prabakaran and get back to you. On the next occasion, when they met, Balasingam has read out a note from Mr. Prabakaran, I may consider withdrawing from North but never from the East. Tell Mr. Premadasa no agreement can be reached without East included’.

நான் பிரபாகரனை பற்றி துதிபாடவில்லை, பாட வேண்டியதேவையும் எனக்கில்லை. ஆனால் வரலாற்றை வரலாறாக பதிவுசெய்ய வேண்டும். ஒரு இனம், ஒரு நிலம் என்று வாழ்ந்த பிரபாகரனை பிரதேசவாதியாக வர்ணிப்பது முற்றிலும் தவறு. இன்றைய தமிழ் தலைவர்கள் பிரபாகரனைப்போல் கிழக்கை விட்டு கொடுக்காமல் இருப்பார்களா ? என்ற கேள்வி நியாயமானது

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments