
புலிகள் இயக்க போராட்ட வாழ்வில் தமிழக வரலாற்றிலும் சரி, தலைவரது போராட்ட வாழ்விலும் சரி, தவிர்க்க முடியாத ஊர் இந்த மதுரை பட்டிணம்
தலைவருக்கு மிகவும் பிடித்த ஊர் இந்த மதுரை. போராளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் இருந்து பல இக்கட்டான சூழல்களில் வந்து போகும் இடமாக பாதுகாத்தது இந்த மதுரை. நம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பேரன்பிற்குரிவர் ஐயா தமிழ்கூத்தனார் அவர்கள்.
ஆரம்ப கால கட்டத்தில் காங்கிரசில் இருந்து தேசிய நீரோட்டத்தில் இயக்கத்தையும் தலைவரின் போராட்டத்தையும் ஏற்க மறுத்து விமர்சித்தவர். நாளடைவில் பேராயக்கட்சிகளின் போலி பித்தலாட்டங்கள் புரிந்து இன அரசியல் தான் நமக்கானது. அது மட்டுமே தீர்வு! பிரபாகரன்தான் நமக்கானவர் என உணர்ந்து தனது கடைசி காலம் வரை தமிழ்தேசியத்திற்காகவே வாழ்ந்து முடித்தவர்.
இயக்கத்திற்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து பல உதவிகர வேலைகளை செய்தவர். நாளடைவில் புலிகளின் மதுரை திருநகர் முகாமுக்கு பொறுப்பாளாராக செயல்பட்டவர்.
1983 ஜுலை இனக்கலவரத்தின்போது ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையை கண்டித்து மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தியவர். தீப்பந்த ஊர்வலம் நடத்தியவர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். ஆரியத்தை முழுமையாக எதிர்நின்று போராடிய தமிழ்தேசியப் போராளி.
தமிழ்நாடு முற்போக்கு கவிஞர் பேரவை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு விழாநடத்தியவர்.
இதில் எங்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி என்ன வென்றால் ஐயாவும் நாங்களும் ஒரே ஊர். உறவு முறை. அந்த நன்றிக்கடனோ என்னவோ தமிழ்தேசியம் எங்களையும் இழுத்துக்கொண்டு மேன்மையடைய வைக்கின்றது. ஓடாத்தூர் என்கிற குக்கிராமத்தில் பிறந்து ஈழப்போராட்டம் வரை பங்களிப்பு செய்திருக்கிறார். தமிழ்தேசிய விதையினை ஐயா.பழ நெடுமாறன் அவர்களோடு இணைந்து மதுரையைச்சுற்றிலும் பரவச்செய்திருக்கிறார். எங்கள் ஓடாத்தூர் கிராமத்தைச்சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இதை விட பெருமை வேறென்ன இருக்க முடியும்????
படம்: பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தந்தை கி.பழனியப்பனார் அவர்களுக்கு 1982ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பவளவிழாவின் போது எடுக்கப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் தமிழினத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வேட்டி அணிந்து கலந்துகொண்டார்.
தலைவருக்கு அருகே நிற்பவர் தான் ஐயா தமிழ்கூத்தனார் அவர்கள். ஐயாவின் நினைவினைப் போற்றுவோம்!
சோத்துக்கே வழி இல்லை என்ற நிலை வந்தாலும் கூட பரவாயில்லை….. தலைவரை நாளைய தலைமுறைக்கு கடத்துவது எங்கள் பிறவிக்கடன்!!! பிரபாகரன் பெயரைச் சொல்லி மீசையை முறுக்கு.
