×

காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்த  நினைவு நாள் 01.11.1993

காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பித்த  நினைவு நாள் 01.11.1993

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்கள் தாய் தந்தையரை இழந்து வளர்ப்புத் தந்தை அரவனைப்பில் வளர்ந்து சிறுவயதில் போராட்டத்தில் இணைந்து தலைவருடன் செயற்பட்ட காலத்தில் அவருக்கு வருத்தம் காரணமாக தலைவர் அவரை விசேடமாக கவனித்து வந்தார்.

இறுக்கமான நேரத்திலும் இவருக்கு பால் கொடுப்பதற்காக பால்மாடு வாங்கி பால் கொடுத்து வந்தார்.அவர் கரும்புலியாக போகும்போது தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று எவரும் இருக்க கூடாது.

அவர்களை எமது இயக்கம் அரவனைக்க வேண்டும் என்று தனது ஆசையை தலைவரிடம் கூறி கரும்புலியாகச் சென்றார். அவர் கூறியவார்த்தைக்கு அமைவாக காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம் 01.11.1993 அன்று தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அந்‌த இல்லத்தில் தமிழீழத்தின் அனைத்துப் பகுதியிலும் உள்ள பெற்றோரை இழந்த பிள்ளைகளை எடுத்து வளர்த்தார்கள். இன்று அந்த இல்லத்தில் வளர்ந்தவர்கள் தமிழீழத்தின் தூண்களாகவும் கல்வியாளர்களாகவும் ,நம்பிக்கையானவர்களாகவும் இருக்கின்றார்கள். தொடர்ந்தும் தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான பணிகளை முன்னெடுத்து சிறப்பாக செய்ய தமிழீழ செயற்பாட்டாளர்களை வேண்டுகின்றோம்.

(Translation by Tamilpriya)

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments