×

இதய பூமியைப் பாடி ஆடுவோம்!

இதய பூமியைப் பாடி ஆடுவோம்!

புயலெழுந்தது போலப் புகுந்த நம் புலிகள் மீதிலோர் பரணியைப் பாடுவோம்.

வயல் வெளிகளை கடந்து நடந்த நம் வரிப்புலிகளை வாழ்த்தியே ஆடுவோம்.

அயல்விடிந்திட மண்கிண்டி மலையிலே ஆடியே, பகை வென்றவர் வீரத்தின் இயல்பு பாடுவோம், இனிவரும் நாட்களில் “இதயபூமியை” பாடியே ஆடுவோம்.

உதயம் ஒன்றினுக்காக எழுந்தவர் ! ஊரழித்தநம் பகைவரை வென்றவர் ! “இதயபூமி” என்றிங்கு நிமிர்ந்துமே இங்கிருந்த நம் எதிரியைக் கொன்றவர்.

விதைகளாகி மண்கிண்டி மலையினில் விழுந்த வேங்கைகள் , வீரங்கள் பாடிடும் கதைகள், எங்களின் தாயக மண்ணிலே காலம் காலமாய் நின்று உலவிடும்!

-புதுவை இரத்தினதுரை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments