×

லெப்டினன்ட் சிறி (ரைகர்தேவன்) வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் சிறி (ரைகர்தேவன்) வீர வரலாற்று நினைவுகள்

லெப்டினன்ட் சிறி (ரைகர்தேவன்)
தம்பிப்பிள்ளை செந்தில்நாதன்
புதூர், மட்டக்களப்பு  
வீரப்பிறப்பு: 12.08.1964
வீரச்சாவு: 10.09.1988

நிகழ்வு: மட்டக்களப்பு மாவட்டம் தாழங்குடா பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மட்டக்களப்பு பிராந்தியத்தில் தமிழ்தேசியவாதத்தைக் கட்டி எழுப்புவதில் காசி அண்ணாவுக்கு எந்தளவுக்குப் பங்கு இருந்ததோ அதேயளவு தமிழீழ விடு தலைப்புலிகள் அமைப்பைக் கட்டி வளர்த்ததில் ஜெயம் (வள்ளுவன்) அண்ணருக்குண்டு

காசி அண்ணாவின் தம்பியான இவர்தான் அவரது அந்தரங்கக் காரியதரிசி என்று சொல்லலாம். காசி அண்ணாவின் செய்திகளை அவரது நம்பிக்கைக்குரியவர்னிடம் சேர்ப்பது காசி அண்ணா எங்கு செல்லவேண்டுமோ அங்கெல்லாம் அவரைக் கூட்டிக் கொண்டு செல்வது. இன்னும் இன்னும் சுருங்கச் சொன்னால் அவரது நிழல்போல வாழ்ந்தவர். இதனால் இந்தப் பிராந்தியத்தில் விடுதலை உணர்வுள்ளர்கள் யார் என்பதை அவர் இனங்கண்டிருந்தார் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், தம்பிக்கையான இலட்சியத்தில் உறுதியானவர்களை அடித்தளமாகக் கொண்ட இயக்கமாக எமது இயக்கத்தை உருவாக்கப் பாடுபட்டார்.

அத்துடன் முன்னர் இவர் மலேரியாத் தடுப்பு உத்தியோகத்தராகவும் இருந்தமையால் பொதுமக்களுடன் நெருங்கிப் பழகும். சந்தர்ப்பமும் இவருக்கிருந்தது. இந்த அறிமுகங்களையெல்லாம் விடுதலைப் போராட்டத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்தினார் அவர்

ஆகவே, மட்டக்களப்புப் பிராத்தியப் போராளிகளுக்கு இவரது அருமை நன்றாகத் தெரியும். எந்த நெருக்கடியிலும், இவரைப் பாதுகாக்க வேண்டும். இவரது பாதுகாப்பே இயக்கத்தினரைப் பாதுகாக்க உதவும் என்பது அவர்களது கருத்து

இவரைப் பாதுகாப்பதற்கு தகுதியான ஆள் யார்?

இந்திய இராணுவம் புலிகளைத் தேடி மோப்பமிட்டுக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான காலகட்டத்தில் நீர்வழி, நிலவழி இரண்டிலும் திறமையாகச் செயற்படக்கூடியவர் யார்?

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். இப்பணியைச் செய்யக்கூடியவன் டைகர் தேவர் தானென்று ஏனைனில் லக்ஸ்மனை காப்பாற்றிய சம்பவம் அது மயிர்கூச்செறிய வைக்கக்கூடியது.

பிரஜைகள் குழுவின் பெயரால் சிறிலங்கா காவல் துறையுடன் தொடர்பு கொண்டு பின்னர் நாளாவட்டத்தில் தமிழ்த்துரோகியாக மாறிவிட்ட சாம்-தம்பி முத்து என்பவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு லக்ஸ்மனிடம் ஓப்படைக்கப்பட்டது.

இவன்தான் இந்தியப்படையினரைக் கனவிலும் பயமுறுத்திக் கொண்டிருந்தவன். முகாமைவிட்டு வெளியே செல்லும் சமயங்களிலெல்லாம். அவர்கள் கடவுளைக் கும்பிட்டு விட்டே செல்வார்கள் அங்கு கைதியாக இருந்தவர்கள் ஒருநாள் இதற்கான காரணத்தை அவர்களிடம் வினவினர் அதற்கு அவர்கள் அளித்த பதில் லக்ஸ்மன் பார்ட்டியை எதிரே சந்தித்து விடக்கூடாது என்றே தாம் கும்பிடுவதாகக் கூறினார்கள்.

இப்படியாக இந்தியப் படையையே கலக்கிக் கொண்டிருந்த லக்ஸ்மனின்” குழுவில்தான் இவனும் ஒருவனாக இருந்தான்

நாற்புறமும் வாவியினால் சூழப்பட்ட புளியந்தீவு என அழைக்கப் படும் பகுதியே மட்டக்களப்பு நகரம். இதற்குள்தான் இருந்தது துரோகி சாம்தம்பிமுத்துவின் இல்லம் தீவுக்கு வரும் இரு பாதையின் வழியிலும் படைமுகாம்கள் இருப்பதால் புலிகள் தன்னை நெருங்க முடியாது’ என அவர் கருதியிருந்தார் ஆனாலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த சில தேசத்துரோகிகள் இவரது வீட்டைக் காவல் புரிந்து வந்தனர், எனினும், புகைபோக முடியாத இடம் எல்லாம் புலி போகுமல்லவா? எப்படியோ லக்ஸ்மன் அந்த வீட்டினுள்ளே நுழைந்து விட்டான்.

சாம் தம்பிமுத்துவின் எதிரே பிஸ்ரலுடன் லக்ஸ்மன். ஆனாலும் பிஸ்ரல் காலை வாரிவிட்டது. ஒன்று இரண்டு மூன்று ஸ்ரக் ஆகிவிட்ட பிஸ்ரலிருந்து திரும்பத் திரும்ப ரவைகளை வெளியேற்றி விட்டு சுட முயற்சித்தான் லக்ஸ்மன் ஏமாற்றம்தான்.

இதேவேளை பின்பக்கத்தில் வந்த ஒரு தேசத்துரோகி லக்ஸ்மனைத் தாக்கினான் லக்ஸ்மனது கைமுறிந்து விட்டது. அவனும் கீழே விழுந்து விட்டான். அவனைக் கட்டி இந்தியப் படையிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தனர் அவர்கள் தகவல் அறிந்த இந்தியப்படையினரும் அப்பகுதியை முற்றுகையிட்டனர்.

இந்த நேரத்தில் தான் கையில் ஏ கேயுடன் உள்ளே நுழைந்தான் டைகர் தேவன் அவனது ஏ.கே. தேசத்துரோகிகளை எச்சரித்தது. அவ்வளவுதான் அனைவரும் உயிருக்கு அஞ்சி ஓடினர். இவன் லக்ஸ்மனைத் தோளில் போட்டுக் கொண்டு ஓடினான்.

நாற்புறமும் வாவியால் சூழப்பட்ட எமக்குப் பாதகமான இயற்கை அமைப்பு. இதற்குள் இவர்களுக்கென்றே போடப்பட்ட முற்றுகை, ஆனாலும் எப்படியோ அவர்கள் கண்ணில் படாதவாறு லக்ஸ்மனைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து ஒரு தோணியில் ஏற்றினான் டைகர் தேவன். நீரைக்கிழித்துக் கொண்டோடிய அந்தத் தோணி துடுப்பினாலும் புயல் வேகத்தை உருவாக்கக்கூடியவர்கள் புலிகள் என்பதை நிரூபித்தது.

கரைக்கு வந்த இந்தத் தோணியிலிருந்து லக்ஸ்மனை இறக்கும்போது அவனுக்கு ஆறுதல் சொன்னான். எப்பிடியும் இவனைப் போடலாம் மச்சான் கொஞ்ச நாள் போக நீயே இவனைப் போடுவாய் பார் காலம் இவனது கூற்றை திரூபித்தது, ஜெயம் அண்ணருக்குப் பாதுகாப்பாக இவன் இருந்த வேளையில்தான் அந்தச் சந்தர்ப்பம் நிகழ்ந்தது. தாழங்குடாவில் இவர்கள் தங்கி இருக்கும் இடத்தை யாரோ காட்டிக்கொடுத்து விட்டார்கள். கிட்ட நெருங்கியதும்தான் இந்தியப் படையைக் காண முடிந்தது. இவனால் எஸ். எல். ஆர். களை இவனது ஏ. கே. கலவரப்படுத்தியது.

“நான் உயிரோடு இருக்கும் வரை ஜெயம் அண்ணரை நெருங்க விடமாட்டேன்” என்ற செய்தியைத் தனது ஏ. கே. மூலம் சொன்னான் இவன்.

சில வினாடிகளில் இவனது எ கே. மௌனமாகியது. கூடவே இவனும் அதன் பின்னர் தான் ஜெயம் அண்ணரின் வாய் சயனைட்டின் சுவையை அறிந்தது.

மட்டக்களப்புப் படுவான்கரைப் பகுதி- இது, கூத்துக்கலைக்குப் பெயர் போனது. கூத்தாடுபவர்களும், கூத்துப் பயிற்சி பெறுபவர்களும் மாலை வேளையில் உடுக்கடித்துப் பாடுவதைக் கேட்கலாம்.

இப்பகுதியில் தான், 1985 ம் ஆண்டளவில் இவன் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான் இந்தப் பகுதியிலுள்ள பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் நாளில் தமது நேர்த்திக் கடன்களைச் செலுத்த ஏராளமான பக்தர்கள் கூடுவர் மட்டக்களப்பு நகரமே ஆற்றைக் கடந்து பண்டாரியா வெளிக்குவந்துவிடும். இரவைப் பகலாக்கும் வெளிச்சத்துடன் நடைபெறும் அந்தப் பொங்கல் விழாவில், ஆலய ஒலிபெருக்கியில் பொதுமக்கள் அறிவித்தல் செய்வதற்கு இரண்டு ரூபா கட்ட ணமாக அறவிடப்பட்டது. அவ்வாறு இரண்டு ரூபா பெற்றுக் கொண்டு ஒரு அறிவித்தலை ஒலிபெருக்கினார்கள். மட்டுநகர் புதுாரைச் சேர்ந்த தேவனை நீடுழிகாலம் வாழ்கவென பண்டாரியா வெளி நாகதம்பிரானை வேண்டி வாழ்த்துகின்றார்கள் துறையைச் சேர்ந்த அம்பினாத்.

இந்தக் காட்சிகள் இன்று நாம் இழந்து போனவைதான் இவை மட்டுமல்ல. கல்லடிப்பாலத்தில் நாம் கேட்கும் பாடும் மீன் இசை. படுவான்கரையின் கூத்திசை, அதிகாலையில் சித்தாண்டியில் கேட்கும் அவல் இடிக்கும் ஓசை. இவையெல்லாமே நாம் இழந்து போனவை.

இவற்றுக்குப் பதிலாக அவல ஓசைகளும், அந்த அவலங்களுக்குக் காரணமானவர்களின் முகாம்களுக்கு விஜயம் செய்யும் பிக்குமாரின் பிரித் ஓசைகளுமே ஓங்கி ஒலிக்கின்றன.

இந்நிலையை மாற்றும் இளைய தலைமுறைப் புலிகளின் துப்பாக்கி ஒலி பரவலாக அதிகரித்து வருகிறது. அன்று இவனுக்கு வாழ்த்துச் சொன்ன நாகதம்பிரான் கோயில் ஒலிபெருக்கி விரைவில் இவனுக்கு அஞ்சலி செய்யும். அந்த நாளில் இந்த மண்ணில் சுதந்திரம் நிலவும் என்பது திண்ணம்.

 

 

Lieutenant Sri (Tigerthevan) – Heroic historical memories

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments