×

ஊர் நோக்கி – மலையாளபுரம் கிளிநொச்சியின் ஒரு ஊராகும் 

ஊர் நோக்கி – மலையாளபுரம் கிளிநொச்சியின் ஒரு ஊராகும் 

மலையாளபுரம் ஈழத்தின் வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது

இது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவி்லும்

கிளிநொச்சி நகரத்திற்குத் தெற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது

செல்வா தொண்டமான் ஒப்பந்தத்தில் குடியேறிய மக்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் போர் காரணமாக இடம்பெயர்ந்து தம் நிலங்களை இழந்த மக்கள் குடியேறிய மக்கள் வாழும் ஊரே மலையாளபுரம். செஞ்சோலை கிராமம் மாவீரர் கிராமம் போன்ற கிராமங்களை தன்னுள் கொண்ட மலையாளபுரம் மலையாளபுரம் வடக்கு மற்றும் தெற்கை பெரும் பாகமா கொண்டுள்ளது பாரதிபுரம் கிருஷ்ணாபுரம் இரணைமடுச் சந்தியை எல்லைகளாக கொண்டுள்ளது,

மலையாளபுரம் ஈழ வரலாற்றில் நீண்ட காலம் நீடித்த இன அழிப்பு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேறுவதற்கான முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் வீட்டுத் திட்டங்கள் உட்படப் பல மீள்குடியேற்ற மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதக் குடியிருப்புத் திட்டம் போன்ற அமைப்புகளும் சமூக மையங்கள், வீதிகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகள் போன்றவற்றை மீளமைக்கும் பணிகளில் உதவியுள்ளன.

மீள்குடியேற்றத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அயராது உழைத்துள்ளனர்.ஈழப் போரியல் வரலாற்றில் எண்ணற்ற போராளிகள் மாவீரர்களை ல் தந்த மலையாளபுரம் மண்ணின் மானத்தோடு மாவீரர் கிராமத்தையும் கொண்டிருந்தது

வேளாண்மை வயல்கள் வேறு எந்த வாழ்வாதாரம் பின் புலம்பும் இல்லாத இடத்திலும் சிறு பயிர் செய்கை மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் கல்வி உழைப்பு என்ற மூலதனத்தைக் கொண்டு

மலையாளபுரம், போருக்குப் பிந்தைய மீள்குடியேற்றத்தையும், வளர்ச்சிப் பணிகளையும் சந்தித்து வரும் ஒரு கிராமமாகும். இங்கு வாழும் மக்கள் தங்கள் ஊரை மீண்டும் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வட்டக்கச்சி வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments