
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23).
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009, மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார்.
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனவேதனை அடைந்திருந்தார். இந்நிலையில், திடீரென தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடி “இலங்கைத் தமிழர்கள்!” வாழ்க என்றும், “இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்” என்றும் ஆவேசமாக முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இவர் தீயிட்டுக் கொள்வதைத் தடுக்கப் பலர் முயற்சித்த போதிலும், அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தீயிட்டுக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.
வீரவணக்கம்