×

முதலாவது “சுதந்திர” நாளன்று வடக்கு கிழக்கில் பறக்காத கொடிகள் பறந்தது பிரிட்டிஷ் ஜாக் கொடி மட்டுமே.

*04.02.1948* முதலாவது “சுதந்திர”

*04.02.1948* முதலாவது “சுதந்திர” நாளன்று வடக்கு கிழக்கில் பறக்காத கொடிகள் பறந்தது பிரிட்டிஷ் ஜாக் கொடி மட்டுமே.

(அன்றைய வீரகேசரியில் வந்த செய்தியின் தமிழையும் அப்படியே பிரதி செய்துள்ளேன்)

சங்கநாதத்துடன் இன்று இலங்கை சுதந்திரோதயம்.

வீரகேசரி 4-2-1948 தலையங்கம்
இத்தலையங்கத்தின் கீழ் வந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட அவதானத்துக்குரிய விடயம்.

ஒன்று
நந்திக்கொடி பறக்க விடக்கூடாது.

சிங்கக்கொடியை அங்கீகரிக்காத யாழ்ப்பாணம் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சுதந்திர விழாவின் போது சிங்கக்கொடி உத்தியோக ரீதியில் பறக்க விடப்படமாட்டாது.

ஆனால் அதே சமயத்தில் அரசாங்கக் கொடி மரங்களில் நந்திக் கொடி ஏற்றப்படுவதும் அனுமதிக்கப்பட மாட்டாது

பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியே இவ்விடங்களில் உபயோகிக்கப்படும் இதர பிரதேசங்களில் யூனியன் ஜாக் கொடியும் சிங்கக்கொடியும் தனித்தனிக் கொடி மரங்களிலோ அல்ரது ஒரே கொடி ஸ்தம்பத்திலோ பறக்கவிடப்படும்.

ஆனால் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் விசேஷக்கொடி ஸ்தம்பம் நாட்டி கொடியேற்ற விழா நடக்கும் போது சிங்கக்கொடி மட்டுமே ஏற்றப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் திருகோணமலை போன்ற இடங்களில் உத்தியோக ரீதியில் சிங்கக்கொடிகளும் அலங்காரத்துக்குக்கூட உபயோகிக்கக்கூடாது.

இவ்விஷயங்கள் சம்பந்தமாக உள்நாட்டு மந்திரியின் நிரந்தரக் காரியதரிசி திரு வி.குமாரசாமி மாகாண சர்க்கார் ஏஜண்டுகளுக்கு ஒரு சுற்றுநிருபம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு முதலாவது “சுதந்திர” நாளன்று வந்த வீரகேசரியின் முதற்பக்கச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments