×

09.01.1997 – பரந்தன் ஆனையிறவு இராணுவ கூட்டுப்படை முகாமின் மீதான ஊடறுத்து தாக்கி அழிக்கும் வெற்றிச்சமர்.

09.01.1997 – பரந்தன் ஆனையிறவு இராணுவ கூட்டுப்படை முகாமின் மீதான ஊடறுத்து தாக்கி அழிக்கும் வெற்றிச்சமர்.

சந்திரிகா அரசின் யாழ்ப்பாணப் ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதற்கு அனையிறவு இராணுவ வலயத்தை பாதுகாப்பது இன்றியமையாதது. அது சிறீலங்காவின் போர் மூலோபாயத்தின் உயிர்மையம். யாழ்ப்பாணத்தைப் பெருநிலப்பரப்புடன் இணைக்கின்ற ஒரே தரைப்பாதையைக் கொண்டிருக்கும் அதன் கழுத்துப் போன்ற ஆனையிறவை ஓர் இராணுவக் கூட்டுத்தளமாக மாற்றியிருந்த சிங்களம், யாழ் ஆக்கிரமிப்பின் பின் அதையொரு பாரிய இராணுவ வலயமாக மாற்றியது.

கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவென அகன்று விரிந்து பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை உள்ளடக்கிய அந்த இராணுவ வலயம், யாழ்ப்பாணத்தைத் தன் பின்பலமாகக் கொண்டிருந்தது.

1997இல் மேலும் முக்கியத்துவம் பெற்றது. ‘சத்ஜய’ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகளோடு, இராணுவ வலயத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடனும் யாழ்க் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையைத் திறக்கும் முயற்சியில் மேலும் முன்னேறும் பொருட்டும் ஆனையிறவை இயங்கு தளமாகக் கொண்ட பாரிய படையெடுப்பு ஒன்றிற்கு சிங்களப்படை தயாராகியது. மேலும் முன்னணிப் படையணிகள் குவிக்கப்பட்டும் முன்னகர்வுக்குத் தேவையான அதிசக்தி வாய்ந்த மரபுப்போர்க்கருவிகள், தளபாடங்கள் பெருமளவிற் குவிக்கப்பட்டும் படைத்தலைமையின் இறுதிக் கட்டளைக்காகக் காத்திருந்தது ஆனையிறவு.

இந்நிலையிற் போரியலிற் களயதார்த்தத்திற்கேற்ப அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் எமது தலைவர், ஆனையிறவு – பரந்தன் கூட்டுத்தளம் மீது வியப்பூட்டும் ஓர் ஊடறுப்புச் சமரைச் செய்வதென முடிவுசெய்தார். சிங்களப்படைகளின் போர் ஏற்பாடுகளைச் சின்னா பின்னப்படுத்துவதுடன், களநிலைமைக்கேற்பத் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அம்சங்களை உள்ளடக்கிய தாக்குதல் திட்டத்தை வரைந்திருந்தார்.

விடுத லைப் புலி களின் போரியற் சாதனைப் பட்டியலிற் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சமராக ஆனையிறவு – பரந்தன் படைத்தளங்கள் மீதான ஊடறுப்புச் சமர் அமைகிறது. தளத்தின் மையப்பகுதிவரை ஊடுருவி, அதன் உயிர்நாடியான ஆட்லறித் தளங்களையும் பிரிகேட் தலைமையகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, எதிரியின் ஆட்லறி நிலைகளிலிருந்தே அவற்றைப் பயன்படுத்தி அவனுக்கெதிரான தாக்குதலை நடத்தி, இறுதியிற் பெரும் ஆயுதக் களஞ்சியங்களையும் ஒன்பது ஆட்லறிகளையும் அழித்து, எதிரியின் இதயத்துள்ளேயே எமது படையணிகள் புரிந்த வீரச்சமர் நிகழ்வுகளை இவ்வூடறுப்புச் சமர் தன்னகத்தே அடங்கியுள்ளது.

சமரின் இறுதியில் அங்கிருந்து இரண்டு 120மி.மீ பீரங்கிகளை மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

போர்த்தயாரிப்புகளுடன் ஆரவாரித்திருந்த பகைவனின் படைத்தளம் அமைதியாக உறைந்துபோனது. ஆனையிறவிலிருந்தான தனது படையெடுப்புத் திட்டத்தை எதிரி கைவிட்டான். தளபதி பிரி..டியர் பால்ராஜ் இந்த வெற்றிச் சண்டையை வழிநடத்தியிருந்தார்.

இந்த சமரில் 103 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து வெற்றியை பரிசளித்தனர்.

 

 

ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமர்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments