×

வெற்றிக் கேடயம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட காட்சி

‘விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது’ தமிழீழ வலைபந்தாட்ட அணியை தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டி கௌரவித்தார்!

அணித் தலைவி நிசாந்தி இராஜரட்ணம் அவர்களால் தமது அணிவென்றெடுத்த வெற்றிக் கேடயம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட காட்சி

பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற 8ஆவது தேசிய தமிழர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தாயகம் திரும்பிய தமிழீழ வலைப்பந்தாட்ட அணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டிக் கௌரவித்தார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தமிழீழ விளையாட்டுத்துறையின் பொறுப்பாளர் கி. பாப்பா அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

வெற்றி பெற்ற அணியினருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், சிறப்புப் பரிசில்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்ட காட்சி

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு . சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விளையாட்டுத்துறை இணைப்பாளர் திரு. இன்பன், தமிழீழ விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. ம. பத்மநாதன், தமிழீழ விளையாட்டு துறையின் செயலாளர் திரு அன்ரன் அன்பழகன், வலைப்பந்தாட்ட அணியின் முகாமையாளர் திரு றொகான் இராஜசிங்கம் ஆகியோருடன் விளையாட்டுத்துறையின் மாவட்டப் பொறுப்பாளர்களும் போராளிகளும் மக்களும் கலந்து கொண்டனர்

தேசியத் தலைவர் வலைப்பந்தாட்ட அணியுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட காட்சி

நிகழ்வின் தலைவர் பாப்பா அவர்களின் தலைமை உரையினைத் தொடர்ந்து பாப்பா அவர்களால், விளையாட்டு அணியினர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து வலைப்பந்தாட்ட அணித் தலைவி நிசாந்தி இராஜரட்ணம் அவர்களால் தமது அணிவென்றெடுத்த வெற்றிக் கேடயம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் தேசியத் தலைவர் அவர்கள் இவ்வெற்றிக்கேடயத்தை விளையாட்டுத்தறைப் பொறுப்பாளரிடம் கையளித்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments