×

ஆதிச்ச நல்லூர்

ஆதிச்ச நல்லூர் அகழாய்வுப் பொருட்கள் கூறும் பொருநை நதி நாகரீகம் (தமிழர் நாகரீகம்) மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்று என்பதை உலகுக்குப் பறைசாற்றுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கம்,வெண்கலம்,இரும்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் வெறும் முதுமக்கள்  தாழியை மட்டும் கொடுக்கவில்லை. அங்கு வாழ்ந்த மக்களின் கலை,  தொழில்நுட்பம், உணவுப் பழக்கம், போர்க்கருவிகள்,  மற்ற நாடுகளுடன் நடந்த வாணிபம், காஸ்மோ பாலிடன் வாழ்க்கை முறை என பல வரலாற்றுப் பெருமிதங்களையும் அள்ளி தந்துள்ளது.

இன்னும் தாமிரபணி நதிக்கரை முழுவதும் ஒரு பரந்துபட்ட அகழாய்வு நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும், நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments