×

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர்.

உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர். அரியலூரை அடுத்துள்ள கீழ்ப்பழுவூரில் 30.07.1937 இல் ஆறுமுகம் -தங்கத்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த சின்னசாமி, வேளாண்மையில் ஈடுபட்டு, தமிழுணர்வும், தன்மான உணர்வும் மிகுந்தவராக வளர்ந்தவர். இவரது மனைவி கமலா, மகள் பெயர் திராவிடச்செல்வி .

‘இந்த ஆட்சி மொழிச் சட்டம் ‘ அறிவிப்பை அடுத்து சென்னை சென்று தியாகராய நகர் தொடர்வண்டி நிலையத்தில் அன்றைய முதலமைச்சரை சந்தித்துத் தமிழைக் காப்பாற்ற வேண்டி காலில் விழுந்து வேண்டினார் .அலட்சியப்படுத்தப்பட்ட உணர்வோடு திருச்சி திரும்பியவர் . 25.01.1964 அன்று அதிகாலை  திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் தன்னுடலில் தீ வைத்துக்கொண்டார். தமிழ் வாழ்க ! இந்த ஒழிக! என முழக்கமிட்டுக்கொண்டே கரிந்து சரிந்தார் .மறைந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments