×

மாமன்னர் அசோகனின் மகத சாம்ராச்சிய ஆட்சிக் காலத்தில் (ஆட்சிக் காலம் கி.மு. 268-232)

மாமன்னர் அசோகனின் மகத சாம்ராச்சிய ஆட்சிக் காலத்தில் (ஆட்சிக் காலம் கி.மு. 268-232)

மாமன்னர் அசோகனின் மகத சாம்ராச்சிய ஆட்சிக் காலத்தில் (ஆட்சிக் காலம் கி.மு. 268-232) சமணம், சார்வாகம், எண்ணியம், பௌத்தம், ஆசீவகம், என்று பல சமயங்கள் இருந்தாலும், எந்தச் சமயத்திலும் உருவ வழிபாடுகள் இல்லை, பாதச்சுவடு வழிபாடே திகழ்ந்தது. அத்தகைய பாதச்சுவட்டு வழிபாட்டுக்கு பெயர் பெற்றது சிவனொளிபாதமலை.இதனை சமண சுமந(சுமநன்) என்ற கமணி அபய என்ற முதன்மை ஈழத்து வரலாற்று பாண்டிய அரசன் கமணி அபய என்பவருடைய பத்து மகன்களில் மூத்தவராகிய தமரஜ என்ற அரசர் காஸப புத்தர் என்ற கழிவெண்பிறப்பு என்ற நிலையை எய்திய ஆசீவக ஐயனார் பூரணர் என்பவருடைய பாதக்கமலங்கள் பதித்த கல்லினை கொண்டு உருவாக்கினார் என தெரிவிக்கப்படுகிறது.

அன்று முதலாக அந்த வழிபாட்டுத்தலம் இப்னு பாதுதா என்ற வரலாற்று ஆசிரியர் காலத்திலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததை அவர் அறிவிக்கிறார்.அதுமாத்திரமல்ல இதே போன்ற பல பாதச்சுவடுகள் இன்றும் கூட வன்னி பெருநிலப்பரப்பில் பல ஐயனார் கோவில்களில் இருப்பதை அவ்வூர் மக்களும் அறிவார்கள், இதுதான் ஐயனார் வழிபாட்டு மூலம்,தொன்மையின் அடையாளம் என அறியாத அவர்கள் மிகவும் புனிதமான அந்த பாதச்சுவட்டை வெளிவீதிகளில் ஏனோதானோ என கற்பூரம் கொழுத்தும் கல்லாக பாவிப்பதை காணக்கூடியதாக உள்ளது,ஈழத்தில் காணப்படுகின்ற இத்தகைய பாதச்சுவடு வழிபாடு இங்கு பெளத்தம் வரலாற்று ரீதியாக அறிமுகமாவதற்கு முன்பானது,இத்தகைய ஆசீவக சின்னங்கள் தாம் இன்று பெளத்தம் தொடர்பான சின்னங்களாக பலரால் வெளிப்படுத்தப்படுகின்றன .ஆனால் அவை யாவும் ஆசீவகம் தொடர்பானவை என்பதை பலர் அறியாமல் உள்ளார்கள்.

இந்த பாதச்சுவட்டு வழிபாட்டைத் தொடர்ந்துதான் பின்னாளில் உருவ வழிபாடுகள் தொடங்கின,ஆகவே இந்த உருவ வழிபாடுகள் தோன்றுவதற்கே முன்பிருந்த பாதச்சுவடு வழிபாடு
இன்று மக்களால் வழிபடும் கல்லாக மாறிப் போனது. இந்த பாதச்சுவட்டு வழிபாட்டைத் தொடர்ந்து ஏற்பட்டவைதான் உருவச் சிலைகளும்,அதற்குரிய ஆலயங்களுமாகும்.

பழந்தமிழகத்தை பொறுத்தவரை அது ஐயனார் வழிபாடுதான்.அதுவும் வெளிப்படையாக ஈழத்தில் பெளத்த மதமே அதனை காஸப புத்தர் என்ற பூரண காசியப்பர் என அறிவிக்கும் போது அதில் என்ன ஐயம்,அது மாத்திரமல்ல அவரது பற்களில்
ஒன்றுதான் கண்டி தலதா மாளிகையில் வைத்து வணங்கப்படுவதுமாகும்,இந்த பல் கிபி 10 நூற்றாண்டில் இராசராச சோழன் மகிந்த என்ற சிங்கள மன்னன் காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்தபோது அநுராதபுரத்தில் இருந்தது.அது பின்பாக கண்டி நாயக்க அரசர் காலத்தில் கண்டியில் முன்னர் கண்ணகை அம்மன் கோவிலாக இருந்த இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது.அதற்கு முன்பாக இந்த இடம் கண்ணகை அம்மனுக்கு பரிகார விழா எடுக்கும் ஆலயமாக திகழ்ந்ததால் பெரகரா என அந்த விழா இன்று பெளத்த விழாவானது.பலர் இந்த சம்பவம் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் தம்பி சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் மனைவியினது தந்தையான நமச்சிவாய முதலியார் ஆங்கிலேயர் ஆட்சியில் கண்டி நீதிமன்ற முதலியாராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டதாக கூறுவர்.

நாளடைவில் அதனை ஜைனம், பௌத்தம், என்று அறவழி கூறிய அனைத்துச் சமயங்கள் சொந்தம் கொண்டாடின,இவற்றை நாளடைவில் கபளீகரம் செய்து விழுங்கிய வைதீகம் இராமர் பாதம் ஆக்கி விட்டது. இறையும், உருவ வழிபாடும் இல்லாத அக்கால பாதச்சுவடு நாளடைவில் கிருஷ்ணன் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவனது பாதங்களாக அதற்கான புராணங்களும் கட்டமைத்துக் கொள்ளப் பட்டன.

குழந்தை கிருஷ்ணனின் பாதத்தை வீட்டில் பதிப்பது என்பது வைதீகம் கற்பித்த ஒரு போலியான வழிபாடு. திரிக்கப்பட்ட வரலாறுகள் தான் நம் மீது திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. முட்டாளாகவும், போலியாகவும் வாழ்வதை ஏற்றுக் கொண்டு விட்ட தமிழ்ச் சமுதாயம் வைதீகம் போதிக்கும் சனாதனத்தின் வழியில், ஊரெல்லாம் கோயில் கட்டித், திருவிழா நடத்தித், தேர் இழுத்துக் கொண்டிருக்கிறது.தமது முன்னோர் வழிபாட்டை அறியாத பழந்தமிழ் பேரினமும் அவற்றை எங்களுடையது அல்ல என தனது சொந்த வரலாற்றையும் அதன் தொன்மையையும் பிறருக்கு தாரைவார்த்து விட்டு வரலாற்றைத் தொலைத்து நிற்கிறது.

 

guest
0 Comments