×

நாக அரசர்களும் அவற்றின் பொருளும்

நாக அரசர்களும் அவற்றின் பொருளும்

ஏற்கனவே சிவனொளிபாதமலை என்பது பண்டைய ஈழத்து பாண்டிய மன்னர்களுடைய ஐயனார் ஆலயம் என்பதும் ,அங்கு இந்த பாண்டிய அரசர்களுக்கு இடையே ஏற்படவிருந்த போரைத் தடுப்பதற்காக வருகை தந்த மதுரை ஓலைக்கடையத்தனார் நல்வெள்ளையார் என்ற பூரண வெண்காயபர் என்ற ஆசீவக அறிவர் அவர்களுக்கு அறவழியை உரைத்த நினைவாக அந்த பாண்டிய அரசர்கள் வழிபாடு இயற்றி வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதும் பல்வேறு தக்க சான்றுகள் ஊடாக கண்டோம்,அதே போன்று அதே காலத்தில்  இன்னொரு ஐயனார் ஆலயமாகத் திகழ்ந்ததே அநுராதபுர அபயகிரி வளாகமாகும். அதுவும் கி்மு 6 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகும்,இதுவே பண்டைய அநுராதபுரத்தில் இருந்த மிகப்பழமையான ஒரேயொரு ஆலயம்,ஏனையவை காலத்தால் பிற்பட்டவை, இதனையும் அந்த மகாவம்சமே அதுவோர் பண்டைய ஐயனார் ஆலயம் என குறிப்பிடத் தயங்கவில்லை,அது அதனை’ காமணி வாபியாசொ பரிபாஜகாராம் காராபேசி தாதேவச ஆஜீவகணம் .(மகாவம்சம் 10:101:102)என்கிறது.

இதனை பண்டுகாபயன் என்ற அரசன் உருவாக்கிக்கியதாக அதுவே கூறுகிறது, இந்த அரசனுடைய பெயரில் உள்ள பண்டு என்பது பாண்டிய அரசர்களையே குறிப்பது என்பதும் இதே போன்ற பாண்டிய அரசர்களுடைய மீன் குலக்குறியீடு கொண்ட அவர்களுடைய கல்வெட்டுக்களே வெளிப்படுத்தும், இந்த கல்வெட்டுக்கள் கூட அந்த ஆஜீவக கருத்துக்களையே கூறுகின்றன. அவை ஆஜீவக கல்வெட்டுக்கள் என்பதற்கான ஆதாரங்களே அவற்றுள்ளும் காணப்படுகின்றன. அந்த ஆஜீவர்களையே இந்த மகாவம்சமும் பரிபாஜகர்கள் என்றும் கூறுகிறது.

அதற்கு ஆதாரமாக ஆஜீவகர்களுக்கு மட்டுமே உரிய ஆடல்,பாடல், ஆண் பெண் அனைவரும் அவர் எவராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் துறவு ஏற்றம்,வானியல்,சோதிட ,சித்தமருத்துவ கோட்பாடுகள்,பாணர்,கூத்தர்,விறலியர்,அரசர்,ஆண்டி போன்ற பாகுபாடற்ற துறவுகள்,தானங்கள் இவற்றுக்கு போதுமானதாகும்,எனவேதான் இந்த பாண்டியர்களுடைய ஆஜீவகம் என்ற சமயம் காரணமாக அவர்களை ஏனைய அயலார் கூற்றுக்கள் நாகர் என விளிப்பதையும் ஒப்புநோக்குகையில் இந்த ஆஜீவகம் எனபது பண்டைய நாக வழிபாடு என்பதும் அதன் ஏழு நிலைகளையும் எய்தியோர் கழிவெண்பிறப்பு என்ற நிலையடைந்த ஐயனார்கள் என விளிக்கப்படுவதையும் காணமுடிகின்றது,அத்தோடு அந்த பாண்டிய அரசர்கள் இந்த ஆஜீவக காவலர்கள் என்பதையும் வெளிப்படுத்த அந்த பாண்டிய அரசர்களுடைய சிற்பங்களுக்கு மேலாக ஏழு தலைகளை கொண்ட நாக உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த பாண்டிய அரசர்கள் நாகர்கள் என விளிக்கப்படுவதையும் காணமுடிகிறது,அதனால் இந்த பாண்டிய அரசர்கள் மாத்திரமல்ல,இந்த ஆஜீவக ஐயனார்கள் கூட தமது தவவலிமையால் இந்த மூலாதாரம் என்ற மகாகுண்டலனி என்ற சக்தியை தமது உடலின் ஏழு சக்கரங்கள் ஊடாக வென்று நல்வெள்ளை அடைந்த மகான்கள் என்பதிலும் அந்த நிலையை எய்தியோர் ஐயனார்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அந்த ஏழுசக்கரங்களே அந்த ஏழுதலை நாகங்கள் என்பதையும் புரிந்து கொள்வதோடு இவ்வாறான அந்த தன்னிகரில்லாத ஆசீவக ஐயனார்கள் எத்துணை மகான்கள் என்ற வியப்பும் ஏற்படுகின்றது.

அதனை எய்திய மூவர் மற்கலி கோசாலர் என்கிற பகவத கோதம சமண புத என்பவர் முதலாமவர்,அடுத்து கண் ந்ந்தாசிரிய இயக்கன் என்பவர்,அதற்கு அடுத்தவர் இந்த வெண்காசிபர் என்ற பூரணர் ஆகியோராவர். அந்த ஏழு நிலைகள்தான் ஈழத்து பாண்டிய அரசர்களுடைய சிற்பங்களுக்கு மேலாக காணப்படுகின்ற ஏழுதலை நாக சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

 

guest
0 Comments