×

தளபதி பானு மாமாவின் மகன் பகலவன் என்னுடைய சிறுவயது நண்பன்.

தளபதி பானு மாமாவின் மகன் பகலவன் என்னுடைய சிறுவயது நண்பன்.

ஜெயந்திநகரில் உள்ள பானு மாமாவின் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வது உண்டு அங்கு அவனுடன் விளையாடுவது ஒன்றாக சாப்பிடுவது ஆமி இயக்கம் விளையாட்டு விளையாடுவது என்று சிறுவயது என்னுடைய நட்பு .பானு மாமாவை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்தது அப்பாதான் ஆரம்பகாலத்தில் அப்பாவுடன்தான் அவர் பணி இருந்தது அது மட்டும் இல்லாமல் அவர் எங்கள் ஊரவர் அதனால் என்னமோ எங்கள் குடும்பத்துடன் நல்ல நட்பு அவர்களுக்கும் எங்களுக்கும் இருந்தது. ஒரு முறை எனக்கு நல்ல நினைவு கருணா பிரிந்து சென்ற காலப்பகுதிக்கு பின்பு சமதானம் யுத்தமாக மாறிய தொடக்ககாலம் பானு மாமா கிழக்கில் பணிபுரிந்துகொண்டு இருந்தார் பானு மாமா வீட்டிற்கு செல்லும்போது பகலவன் பிறந்தநாளுக்கு பானு மாமா வீட்டிற்கு வருகை தரமுடியாத சூழ்நிலை என்பதால் அவனுக்கு Email மூலம் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார் அதனை பல முறை திரும்ப சொல்லி சொல்லி மகிழ்சி அடைவான் அப்பா Email மூலமாக பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினவர் என்று கூறிக்கொள்வான்.

அவனுடன் விளையாட செல்லும்போது சில நேரங்களில் அவனுக்கு ஆங்கில வகுப்பு எடுக்க பானு மாமா வீட்டிற்கு தனியாக ஆசியர் வருகை தருவர் அந்த நேரம் நான் வெளியில் காத்துக்கொண்டு இருப்பேன் வகுப்பு முடிய பின்பு இருவரும் சேர்ந்து விளையாடுவது என்று சிறுவயது நினைவுகள். விளையாட்டில் ஆமி ,இயக்கம் விளையாட்டு விளையாடும்போது அங்கு இருக்கும் இயக்க அண்ணாக்களுடன் சேர்ந்துதான் விளையாடுவது நாங்கள் சிறுவாண்டுகள் நான் ஆமியாக இருந்தாலும் இயக்கமாக இருந்தாலும் சரி நான் தோற்கவேண்டிய நிலைமை ஏற்படும் விட்டு துரத்தி பிடித்து கைகால்கள் கட்டப்படும் சூழ்நிலைக்கு செல்ல வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படும் எனக்கு. எனக்கும் ஒருதடவையாவது வெல்லவேண்டும் அந்த விளையாட்டில் என்ற ஆசை ஆனால் நான் சிறுவன் தோற்றுதான் போனேன் என்னுடைய கைகால்கள் கட்டி என்னை அதிக முறை தோற்கடித்த அந்த இயக்க அண்ணாவை யுத்தத்தின் முடிவின் பின்பு முகாமில் சந்தித்தேன். அண்ணா நீங்கள் அவர் எல்லோ எண்டு கேக்க என்னை தனியாக அழைத்து சென்று தம்பி நான் யார் எண்டு யாருக்கும் சொல்லிபோடாதடா என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் அவர்.

அந்த முகாமில் கசிப்பு குடிப்பதும் புகைப்பதுமாக அவர் ஒரு காவாலி போல் தன்னை அடையாளப்படுத்தி வளம்வந்தார் அவ்வாறு நடப்பதால் யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரக்கூடாது என்று அவ்வாறு நடந்துகொண்டாரோ தெரியாது .நானும் அவர் பற்றி எதுவும் யாரிடம் வெளிக்காட்டவில்லை சொல்லவில்லை. நாங்கள் பகலவன் நான் ஒரு உதைபந்தாட்ட பயிற்சி அணியிலும் கராத்தே தற்காப்பு கலை பயிற்சி வகுப்பில் ஒன்றாக இருந்தோம் அந்த பயிற்சி வகுப்பில் நான் மற்றும் என்னுடைய அண்ணா புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் யவான் மாமாவின் மகள் Satsuthan Nila மற்றும் Parames Sathuryan Kajeevan Vijitha Pakeerathan போன்ற பலர் ஒன்றாக பயணித்து இருந்தோம் . ஒரு முறை பொட்டம்மான் அப்பாவிடம் எங்கள் வீட்டு நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்தவேளை யுத்தம் உச்சம் தொட்டவேளை அப்பாவிடம் கதைத்து கொண்டு இருக்கையில் பானுக்கு கிபிர் அடித்து பானு கூட இருந்த பெடியல் வீரச்சாவு என்றும் சொன்னார். அதன் பின்பு சிலகாலத்தில் எங்கள் வீட்டிற்கு சற்று அருகில் இருந்த புலிகளின் இராணுவ முகாம் மீது கிபிர் விமானங்கள் குண்டுகளை பொழிந்து தள்ளியது அன்றைய நாள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் November 26 அன்றைய தினம்.

புலிகளின் விமான எதிர்ப்பு அணியும் கீழ் இருந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர் அந்த முகாமில் தலைவர் பிரபாகரன் பொட்டம்மான் அந்த முகாமில்தான் இருந்தனர். துள்ளியமாக இலங்கை ராணுவம் அந்த தாக்குதலை செய்தது. எனது வாழ்நாளில் கிபிர் விமானத்திற்கு பயந்தது அதுதான் முதல் தடவை மரண பயத்தை எனக்கு கட்டிய நாள் என்றும் கூறலாம் நிலத்தில் படுத்து தவண்ட நாள் .அந்த சம்பவத்திற்கு பின்பு கிபிர் சத்தம் சின்னதாக கேட்டாளும் நான் பங்கருக்குள் பாய்ந்துவிடுவேன். அதற்கு அடுத்தநாள் புலிகளின் குரல் வானொலி நிறுவனத்தின் மீது கிபிர் விமானங்கள் தாக்குதல் மேற்க்கொண்டனர். அதற்கு அடுத்த நாள் மீண்டும் இரண்டாவது தடவையாக எங்கள் வீட்டிற்கு சிறிது அருகில் உள்ள அதே புலிகளின் ராணுவ முகாம் மீது மீண்டும் தாக்குதல் . இவ்வாறு இடப்பெயர்வு இடமாற்றத்திற்கு பின்பு முள்ளிவாய்கால் மண்ணில் கடைசியாக பானு மாமா குடும்பத்தை பகலவனை கண்டனான் ஆனால் அவனுடன் கதைக்கும் சூழ்நிலை இருக்கவில்லை ஆனந்தபுரம் Box -ல் பானு மாமா காயப்பட்டு வெளியில் வந்திருந்த நேரம் அது அதன் பின்பு பகலவன் தொடர்பு இல்லை யுத்தத்தின் பின்பு பலரிடம் விசாரித்தேன் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவே இல்லை.

உயிருடன் இருக்கின்றார்கள் ஆனால் யாரிடமும் தொடர்பு இல்லை என்று பலர் கூறினார்கள் பானு மாமாவின் உடலின் புகைப்படத்தை இலங்கை இராணுவம் srilankan defence ministry என்ற இணையதளம் புலிகளின் அனைத்து தளபதிகளின் உடலங்களின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது அதில் மே 18 திகதியுடன் பானு மாமாவின் உடலின் புகைப்படத்தில் திகதி குறிப்பிடப்பட்டு இருந்தது.பின்னர் சிலகாலங்களில் அனைத்து புகைப்படங்களும் அந்த இணையத்தளத்தில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டது. என்னுடைய சிறுவயது நண்பர்களில் பகலவனும் ஒருவன். யுத்தம் பலவற்றை பறிந்தது பிரிவுகள் இழப்புகள் என்று ஏராளம்.

 

guest
0 Comments