
சிவனொளிபாதமும் சிவன் கோவில்களும்
பூதவாதம் இது நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்ற ஐம்பூதக்கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவொரு பழந்தமிழக கோட்பாடு இதனை வலியுறுத்திய பூரணர் என்ற பூரண காயபர் இதனை அகிரியாவாத அதாவது வினைமறுப்பு கோட்பாடு எனவும் கூறுவர்,ஆனால் பெளத்தம் இந்த வினைமறுப்புக் கோட்பாட்டைக் கொண்டதல்ல,ஆனால் ஈழத்தில் காணப்படுகின்ற காலத்தால் முந்தைய கல்வெட்டுக்கள் பெரும்பாலானவை,அல்லது முழுமையாகவே இந்த பூதவாத வினைமறுப்பு கோட்பாட்டை பற்றியே பேசுகின்றன.
எனவே இந்த கல்வெட்டுக்கள் அனைத்தும் பூதவாதத்தை உரைப்பதால் இந்த இயக்கர் என்போர் ஐம்பூதக்கோட்பாட்டை கடைப்பிடித்த பூதவாதிகளை குறித்தது எனவும் அறியமுடிகிறது,இதனையே பூரணரும் , ஒருவரின் நற்செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஒரு விளைவையும் ஏற்படுத்தாது அவை (அணுத்திரளாகவும் வெறும் பொருளாகவும் மட்டுமே கருதப்படும் உடல்- உயிர் இணைந்த மனிதரிடம்) காணப்படும் எனக் அறிவியல் ரீதியாக கருதினார். அதனால் அதன் தீமை அல்லது நன்மை ஒருவரை அடைவதில்லை என்று அவர் கூறிவிட்டதாக அவருக்கு மறுப்புரைக்கும் அவரைப் புரிந்துகொள்ளாத புத்த மத நூல்களில் குறிப்புகள் உள்ளன.
இதனால் நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும் என்ற புத்த மதத்துக்கும் நற்குணங்கள் நற்செயல்கள்தாம் ஒருவரின் வீடுபேற்றுக்கு வழி என்னும் ஜெய்ன சமயத்துக்கும் நல்லதால் புண்ணியம் உண்டாகும் கெட்டதால் பாவம் உண்டாகும் என்ற பிற்கால வேத பிராமணீய மதத்துக்கும் பூரணரின் கருத்து பொருந்தவே இல்லை அல்லது அதனை அம்மதத்தார் புரிந்து கொள்ளவும் இல்லை ஏனெனில் அவை அணுக் கொள்கைகளில் கவனமின்றி மனித வாழ்வியல் வழிபடல் நோக்கில் சென்று விட்டன.இந்த அணுக்கொள்கைதான் பூதவாதம் என்ற மெய்யியல் கோட்பாடு.அந்த பூதவாத அணுக்கோட்பாட்டை கடைப்பிடித்த ஈழத்துக் கல்வெட்டுக்கள் கூறுகின்ற பூதவாதிகள் பற்றி முதலில் காண்போம்.
(வெஹரகல)
பருமக கணதத்த ஜய உபஸிகய லெணெ,பத ஸுமந பூதிய லெணெ,
பருமக கணதத்த புதந(பூதன்) லெணெ
அஸிய மித்திய பத ஸுமநஹ மநபஸதநெ நம ஸகஸ திநெ
கணியுத கமிஹ ஸுமந பழய உபஸிக திஸய லெணெ ஸகஸ
கமிஹ வஸ புதநு (பூதன்கள்) கமிஹ திஸபுஸ ,கமிஹ அபஹ சிறிகுத்த தெரஹ.
(மிகுந்தலை)
பருமக குத்த புத பருமக பருமக ஸுமநஹ லெணெ.
(மேற்கூறப்பட்ட அதே ஸுமந பூதன்)
இதஸ்கித தெரஹ ஸதிவிஸரிய ஸுமந குத்தஸ ஜித கனக ரகிய உபஸிக திஸய லெணெ,
(மேலே கொடுக்கப்பட்டுள்ள தத்த,குத்த என்ற பெயர்கள் இந்த பூதவாதிகளை குறிப்பதைக் காண்க)
உபஸிக திஸய லெணெ.
திஸ சமணிய லெணெ.
(இதே ஸுமந குத்தனின் மகள் பெயரும் திஸ,அவள் முதலில் உபாசகியாக இருந்து பின்பாக சமண(பூதவாத)துறவு பூண்டதை இது குறிக்கிறது.
(வெடுக்குநாறிமலை)
மஹசமுத்த புத குத்தஸ லெணெ ஸகஸ
பருமக பமதத்த புதஹ மஹகுத்தஹ லெணெ.
(இங்கும் அதே பூதவாதிகள்)
(பெரியபுளியங்குளம்)
பத தமகுத்தஸ திஸகுத்தஸ தமரகிதஹ லெணெ,அகத அநகத ஸதுதிஸ ஸகஸ.
ஆகவே இந்த பூதவாதிகள் அணுக்கோட்பாட்டை கடைப்பிடித்து போற்றி வந்ததை மிகத்தெளிவாக இவை அறியத்தருகின்றன,இந்த பூதவாதம் பூரணர் என்கிற பூரண காயப்பருடைய அணுக கோட்பாட்டை அடியொற்றிய கோட்பாடாகும்,இதனை அகிரியாவாத கோட்பாடு என பாகத்தில் உரைப்பர், பெளத்தம் இந்த அகிரியாவாத கோட்பாட்டை கொண்டதல்ல அது கிரியாவாத கோட்பாட்டைக் கொண்டது.
ஆகவே இந்த பூதவாத அணுக்கோட்பாட்டுக்கும் அதன் பருப்பொருளாக விளங்குகின்ற சிந்துவெளி காலம் முதல் காணப்படுகின்ற சிவலிங்கத் திருமேனிக்கும் நிறைந்த தொடர்பு காணப்படுகிறது,அதனால்த்தான் இந்த பூரண காயப்பருடைய பாதபீடிகை காணப்படுகின்ற சமந்தகூடம் (மணிமேகலை)
சிவனொளிபாத மலை என அழைக்கப்படுகிறது, அந்த பாதத்திற்கு உரியவர் பூரணர் என்ற சிவகதியடைந்த ஒளியாளர்,சிவனாகவே மாறிவிட்ட ஒருவர்,ஆகையால் அதனை சிவனொளிபாதமலை என்று அழைத்ததில் எந்தவித தவறுமில்லை.அதேபோன்று இந்த கல்வெட்டுக்கள் காணப்பட்ட இடங்களும் சிவ ,ஐயன்களுடைய கோவில்கள்தான்.