×

ஸ்ரெல்த் வேகப்படகும் – கடற்கரும்புலிகளும்.

ஸ்ரைல்த் எனச் சொல்லப்படும் கடற்புலிகளின் கிபிர் வேகப்படகு. எதிரிக்கு அச்சமூட்டும் இவ்வகைப் படகுகள் கடற்புலிகளாலேயே வன்னிக்காட்டில் உருவாக்கப்பட்டது. எதிரியின் Radar இல் இனங்காண முடியாதவாறு இதன் வடிவமைப்பு இருந்ததால் இதனை ஸ்ரெல்த் என அழைக்கப்பட்டன. தொடக்கத்தில் கடற்கரும்புலிகளால் தாக்குதலுக்காக இவ்வகைப் படகுகள் பயன்படுத்தப்பட்டது.

முதன் முதலில் கடற்கரும்புலிகளான மேஜர் கோபி, கப்டன் இசையாளன் ஆகியோர் இப்படகை ஓட்டிச்சென்று திருகோணமலை உட்துறைமுக வாசலில் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்ந சிறிலங்கா கடற்படையின் இரண்டு வோட்டர்ஜெற் படகுகளை இடித்துமோதி தகர்த்தனர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments