×

ஈழத்து நாக அரசும் பத்து உடன்பிறந்தோர் குலமும்

ஈழத்து நாக அரசும் பத்து உடன்பிறந்தோர் குலமும்

ஈழம் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது.இந்தப் பின்னணியில் ஈழம் எங்ஙணும் வாழ்ந்த நாகரின் “வேள்” அரசுகள் மாப்பார்க்கால நாகரிகம் நிலவிய சகல இடங்களிலுமே இருந்தன. அந்த வகையில் அவை குறுநில அரசுகளாய்த் திகழ்ந்தன. அவற்றுக்கு வேந்தனாக ஆய் குலத்தின் வழிவந்த காமினி அபய என்ற பாண்டிய அரசன் திகழ்ந்தான். இவனது காலத்தில் சமணம் எனப்படும் வழிபாடு புத்தாக்கம் கண்டு எழுச்சி பெற்றது. அதனை மற்கலி கோசாலர் என்பவர் தலைமையில் கணி ந்ந்தாசிரியர், பக்குடுக்கை நற்கணியனார்,பூரண காசியப்பர்,நரிவெருத்தலையார் போன்றவர்களும்,பழந் தமிழக அரசர்களும் போற்றி வளர்ந்தனர்.அந்த அரசனின் பத்து மைந்தர்களால் வெல்லப்பட்ட அல்லது நிறுவப்பட்ட அந்த அரசுக்கு “பத்து உடன்பிறந்தாரின் அரசு” என்று பெயர். பிராமிக் கல்வெட்டுகளில் அவ்வரசர்கள் தங்களை |த`ச |பதிகன (dasa batikana) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது தந்தையான காமணி என்பது இயற்பெயரல்ல. அது காம்ம் என்ற கிராமத்தின் தலைவன் என்பதைக் குறிக்கும் பொருள் கொண்ட பாகத மொழிச்சொல்.

பேரா.சி. பத்மநாதனின் நாக வேள்புலக் கருதுகோளின் படி, இவர்களும் நாகர் வம்சத்திலேயே வந்திருக்கவேண்டும் என்கிறார்,அதுவே உண்மையானது என அவர்களுடைய கல வெட்டுக்களில் காணப்படுகின்ற சிந்துவெளி முத்திரை கூட்டெழுத்துக் குறியீடுகள் திரு பூரணச்சந்திர ஜீவா அவர்களுடைய சிந்துவெளி முத்திரைகள் படிக்கும் முறையின் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. அந்த முறையில் அவரது ஒப்பாய்வு பிரகாரம் அது ‘’ஓம் ணக ய்ய ‘’ என்றே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இந்த சமணத்தை தோற்றுவித்த மற்கலி கோசாலர் உட்பட்ட ஏனைய துறவிகளும்,அரசர்களும் பண்டைய இந்தியாவில இருந்த இந்த ணாக வழிபாட்டைத்தான் புத்தாக்கம் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.அதனையே சமணம் என விளித்துள்ளார்கள் என்பதும் புலனாகிறது. அத்தகைய ஒப்பற்ற துறவிகளையே தமிழகம் உட்பட ஈழமும் ஐயன்களாக வழிபட்டு வருகிறார்கள் என்பதும் புலனாகியது.அந்த வகையில் அந்த பத்து உடன்பிறந்தாரின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட போவத்தகல, கொத்ததாமூக்கல, கெனன்னேகல ஆகிய இடங்களில் மீன் சின்னம் வரையப்பட்டுள்ளது இந்த மீன் சின்னம் தெற்காசியாவிலேயே சிறப்பாக பாண்டியருக்குரிய குலச்சின்னம் ஆகும். இந்த பத்து உடன்பிறந்தார் குல மன்னனாகக் கருதப்படும் மச்ச மகாராசனின் பெயரும் (மச்சம் – மீன்) அவர்களது பாண்டியத் தொடர்புக்கான இன்னொரு சான்றாகக் கருதத்தக்கது.

இந்த பத்து உடன் பிறந்தாரில் தர்மராசன் எனும் மகனும், தர்மராசனுக்கு ஆய் மகாதிசையன் எனும் மகனும் இருந்தார்கள் (உரு.01). ஆய் மகாதிசையனின் மகளான இளவரசி “அவ்வை சவெர” (அ|பி ^சவேர, Abi Savera) இந்த சமண துறவிகளுக்கு பெருமளவு குகைகளைச் செய்து தானமாக வழங்கியுள்ளாள். அவள் தனி ஒருத்தியால் பொறிக்கப்பட்ட இருபது பிராமிக் கல்வெட்டுகள் கொத்ததாமூக்கல்லில் வாசிக்கப்பட்டுள்ளன. பண்டைய இலங்கையில் அதிக எண்ணிக்கையான கல்வெட்டுகளைப் பொறித்தவள் ஒரு பெண்ணரசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற சில கல்வெட்டுகள் குமுக்கனாற்றின் கிழக்குக் கரையில் பாணமைப்பற்று போவத்தகல் (|போவத்தே|கல, bōvattēgala) எனும் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தர்மராசன் மகன் ஆய் மகாதிசையன் ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றன. அடுத்து மகன் ஆய் அபயன். ஆய் அபயனுக்கு ஆய் திசையன் (அய தி^ச்^ச, aya tissa) எனும் மைந்தனும் அவ்வை அனுராதை (அ|பி அனுர|தி, abi anuradi) எனும் மகளும் இருந்தனர். கொத்ததாமூக்கல்லில் சவெர அளித்த கொடைகள் போலவே, போவத்தகல்லில் அளித்த கொடைகள் குறிப்பிடத்தக்கவை.அவளது அத்தை அனுராதையால் வழங்கப்பட்டவை. கொத்ததாமூக்கல், போவத்தகல் ஆகிய இரு இடங்களிலும் கிடைத்த பாகத கல்வெட்டுகள், அக்காலத்து இளவரசியர் பெற்றிருந்த சமூக முக்கியத்துவத்தைப் படிப்பதற்கான முக்கியமான ஆதாரங்களாகும்.
குசலான்மலையில் கிடைத்த கல்வெட்டில் நாகனின் மைந்தன் கமணி அபயனுக்குப் பிறந்த காமணி திசையனால் சமண துறவிகளுக்குச் செய்யப்பட்ட தானம் பற்றிச் சொல்லப்படுகின்றது. ஏறாவூர்ப்பற்று கல்லூடுபொத்தானை மலையில் கிடைக்கும் மற்றொரு பாகத கல்வெட்டில் வரும் ஆய் அபயன் என்பவன், குசலான்மலைக் கல்வெட்டில் வரும் அதே அபயன் தான் எனவும் கருதப்படுகிறான்.

விந்தனைப்பற்று வடக்கு (உகணை) கெனன்னேகல்லில் (ஃகெனன்னே|கல, henannēgala) பொறிக்கப்பட்ட இன்னொரு பாகத கல்வெட்டு, மச்ச மகாராசனாலும் காமணி திசையனின் தந்தையாலும் கொடுக்கப்பட்ட சமண அறக்கொடைகளை விவரிக்கின்றது. இங்கு சொல்லப்படும் “காமணி திசையனின் தந்தை” குசலான்மலையில் இடம்பெற்ற அதே ஆய் அபயன் ஆகலாம். குசலான்மலையிலும் மொட்டையாகல்லிலும் கிடைக்கும் நேரடி “பத்து உடன்பிறந்தார் குலத்துச்” சான்று கெனன்னேகல்லில் கிடைக்காத போதும் கொத்ததாமூக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ள அதே மீன் சின்னம் கெனன்னேகல்லில் பொறிக்கப்பட்டுள்ளதாலும், காமணி திசையனின் தந்தை அங்கு சொல்லப்படுவதாலும் கெனன்னேகல்லில் குறிப்பிடப்படுவோரும் பத்து உடன்பிறந்தார் கொடிவழியினரே என்பதை உறுதிப்படுத்தலாம். ஆக, இந்த மச்ச மகாராசன் எனும் மாகத பெயர் அபயன் என்பவனுக்கு அவனை பாண்டியன் என விளிக்கிறது.

இந்த மச்ச மகாராசன் என்ற பாண்டியன் பற்றி கெனன்னேகல் பகுதியில் காணப்படுகிறது. ஆகவே இந்த பாண்டியர்களே நாகர்கள் எனவும் அவர்கள் நாக வழிபாட்டை பேணி வளர்ந்தவர்கள் என்பதும் புலனாவதோடு அதனை சமணம் என விளித்தும் வந்துள்ளார்கள்.அந்த சமணத் துறவிகளாகவே இந்த மற்கலி கோசாலர் உட்பட்ட ஏனைய துறவிகளும்,அரசர்களும் இருந்துள்ளார்கள். அவர்கள் அத்துறவற நிலையில் கழிவெண்பிறப்பு என்ற நிலையை எய்திய பின்பாக ஐயன்களாக விளிக்கப்பட்டு ஐயனாராக வணங்கப்படுகிறார்கள், ஆகவே இந்த நாக வழிபாட்டை போற்றி வளர்த்த அந்த ஐயனார்களிடம் இருக்கும் அதே செண்டாயுதம் அந்த பாண்டியர்களிடமும் இருப்பதில் ஐயமில்லை.

ஈழத்து ஆய்குல நாக அரசர்களுடைய கல்வெட்டில் காணப்படுகின்ற தமிழ் வேர்ச்சொற்கள்
மஹதிஸ – பெருந்திதியன்
திஸ – திதியன்
உதி – உதியன்
அய -ஆய்
அபி – ஆயி
லெணெ – கற்குகை,(க)லெ -கல்,
ணெ- அணை
தம -தவ
ரஜ-(அ)ரச
அபய – ஆய் அய
கமணி-காமம் ,ஊர்களுக்கு தலைவன்
குட -வளைந்த
கோ-ஒப்பற்ற தலைவன்,அரசன்
கோதம-தவப்பெரிய
புத-புத்திரன்
மஹ அய – பெரு ஆய்

 

guest
0 Comments